மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன்.. விட்டுவிடுங்கள் என்ற எஸ்வி சேகர்! ஹைகோர்ட்டில் நடந்த பரபர வாதம்..!
எஸ்வி சேகர் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோரியுள்ளார்
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்வி.சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான கருத்தை பகிர்ந்திருந்தார்...

நடவடிக்கை
இந்த பதிவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.. பல்வேறு தரப்பில் கண்டனங்களும் எழுந்தன.. எஸ்வி சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.. இதையடுத்து, எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது...

எஸ்வி சேகர்
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு எஸ்வி வைத்த கோரிக்கையை கோர்ட்டும் நிராகரித்துவிட்டது.. இதனால் இந்த வழக்கில் ஆஜராக விலக்கு, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி எஸ்வி சேகர் மறுபடியும் மனுதாக்கல் செய்தார்.

நீதிபதி காட்டம்
இதுதொடர்பான விசாரணையில், அந்த பதிவை படிக்காமல் பார்வேர்ட் மட்டுமே எஸ்பி சேகர் செய்தார் என்று கோர்ட்டில் வாதாடப்பட்டது. இதற்கு நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.. ஃபேஸ்புக்கில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என்று சொல்வதற்கு எஸ்வி சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக் கொள்கிறார்கள்? என்று காட்டமாகவே கேள்வி எழுப்பியிருந்தார்.

மன்னிப்பு
இன்றுகூட இது தொடர்பான விசாரணை நடந்தது.. நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி. சேகர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.. ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டதாகும் .. நீதிமன்றத்திலும் மற்றொரு முறையும் மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி. சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்
காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் இதுதொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications