ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு.. மனுவில் வைத்த கோரிக்கைகள் இதுதான்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.'
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகி பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விஷ சராயம் அருந்தியதில் 22 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் 9 சதவீதம் அளவுக்கு மக்கள் மதுவுக்கு அடிமையாக மாறியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 3 ஆண்டுகளில் டாஸ்மாக் விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை எட்டிவிடும்.
எனவே, டாஸ்மாக்கை அடுத்த 3 ஆண்டுகளில் எப்படி மூடுவது என்பது குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா சார்பில் 10 நாட்களில் முதல்வரிடம் வெள்ளை அறிக்கை கொடுக்க இருக்கிறோம். அதேபோல், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக குழு இன்று சந்தித்தது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தனர். அதில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் நேரடியாக தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications