• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆபாசம்".. சுடுகாட்டில் புதைத்த பெண் சடலத்தைகூட.. ராதாரவி இப்டியே பேசிட்டிருந்தா.. பாஜகவுக்கு கஷ்டம்

|

சென்னை: தொடர்ந்து பாஜக பேச்சாளர் ராதாரவியின் பிரச்சாரம் தமிழக மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!

  Radha Ravi-யின் ஆபாச ஜோக்..அத்துமீறல் பேச்சு | Oneindia Tamil

  இந்த முறை தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சார பீரங்கிகள் என்று யாருமே இல்லை.. ஒரு கட்சிக்கு பேச்சுதான் மிகவும் முக்கியம்.. அந்த பேச்சில்தான் திராவிட கட்சிகள் இன்று தழைத்து வந்துள்ளன..

  ஆனால், தமிழக மண்ணில் தாமரையை மலர வைக்க போராடி வரும் பாஜகவுக்கு, தன் கொள்கைகளை கொண்டு செல்ல பிரச்சார பீரங்கிகள் என்று யாரும் இல்லை என்பது பெரிய மைனஸ்.. கட்சி தலைவர்கள் திமுக கூட்டணியை விமர்சித்தே வாக்கு கேட்கிறார்கள்.. நமீதா பேசுவது இப்போது வரை எதுவுமே நமக்கு புரியவில்லை.

  ராதாரவி

  ராதாரவி

  இந்த லிஸ்ட்டில்தான் ராதாரவி இணைகிறார்.. சமீப காலமாக இவரது பேச்சு பெரும் அதிப்தியை தந்து வருகிறது.. பாஜக கூட்டணியை ஆதரிதத்து வாக்கு சேகரித்து வரும் இவர், திமுக மற்றும் கமலை மட்டுமே கையில் எடுத்துள்ளார்.. இவர்களின் அரசியலை பற்றி பேசாமல், தனிப்பட்ட முறையில், பர்சனல் விஷயங்களை மட்டுமே, பொதுவெளியில் பேசும் ஒரு கலாச்சாரத்தை ராதாரவி கடைப்பிடித்தும் வருகிறார்.

  கமல்

  கமல்

  கடந்த வாரம் கோவையில் இவர் பேசும்போது, "கமல்ஹாசன் இங்கே நிக்கறார்னு தெரியும்.. என்னைவிட கமலை பற்றி யாருக்கும் தெரியாது.. இங்கே அவர் நல்லவன் மாதிரி இருப்பார்.. சாய்பாபா காலனியில் வாடகை கட்டாமல் ஓடின கதை தெரியாதா? அங்கே போய் கேட்டு பாருங்க, கமல் லட்சணம் தெரியும்.. அன்னைக்கு ஆட்டோவில் ஏறினதை பார்த்தேன்.. வாழ்க்கையிலேயே ஆட்டோவில் ஏறினது இல்லை.. முதல்முறையா காசு கொடுத்ததே அந்த ஆட்டோக்காரருக்குதான்.. அந்த காசை கூட வேற பக்கம் பிடுங்கிட்டு இருப்பார்" என்றார்.

   நீங்க ரெடியா?

  நீங்க ரெடியா?

  2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் பேசும்போது, "ஸ்டாலின் பேசும்போது, "நான் ரெடி நீங்க ரெடியா?"ன்னு ஏன் சொல்றார்? அவர் ரெடியாகும் போதுதான் மக்களும் ரெடியாக வேண்டுமா என்ன? சமஸ்கிருதம் என்று அவருக்கு சொல்லவே தெரியவில்லைன்னு சொல்றாங்க. அவருக்கு சமஸ்கிருதம் எப்படி வாயில் வரும்? "சம்சாரம்"ன்னுதானே வரும்? திமுகவினர் ஏமாத்துகாரர்கள்..." என்றார்.

  குஷ்பு

  குஷ்பு

  நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்புக்காக ராதாரவி பேசும்போது, "என் குடும்பமே வில்லன் குடும்பம்.. என் அப்பாவுக்கு 20 பொண்டாட்டிங்க.. ஆனாலும் அவர் யாரையுமே தெருவில் விடவிலை.. இதுவே கமலை எடுத்துக்குங்க.. நம்பி வந்த 3 பொண்ணுங்களையும் காப்பாத்தினாரா? அவர் ஒரு கிறிஸ்தவர்.." என்றும், "கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்... நீ இதுவரை எத்தனை தயாரிப்பாளர்களை நடக்கவிட்டிருப்பே.. இப்போ கோவையில் தெருதெருவா அலையறே.. திமுகவை பத்தி சொல்லவே வேணாம்.. சுடுகாட்டில் புதைத்த பெண் சடலத்துக்குகூட திமுகவினர் தொல்லை தந்துடுவாங்க.." என்று ராதாரவியின் அந்த பேச்சு தொடர்கிறது.

   காயத்ரி ரகுராம்

  காயத்ரி ரகுராம்

  இதுவரை ஒரு தமிழக கட்சி விடாமல் பயணம் செய்து வந்திருப்பவர் ராதாரவி.. தற்சமயம் ஐக்கியமாகி உள்ள இடம் பாஜக.. ஆனால், அங்கு இவருக்கு பெரிய பொறுப்பு எதுவும் இதுவரை தரவில்லை.. சமீபத்தில் சேர்ந்த காயத்ரி ரகுராமுக்குகூடபொறுப்பு தந்திருக்கும்நிலையில், இவருக்கு ஏன் எந்த பதவியும் தரவில்லை என்பதை ராதாரவியே சிந்தித்து பார்க்க வேண்டும்.. பல கட்சிகளுக்கு சென்று வந்திருக்கும் சீனியர் இன்று வெறும் பிரச்சாரத்திற்கு மட்டுமே வந்து செல்வது சரியா?

  ராதாரவி

  ராதாரவி

  அப்படியே பிரச்சாரம் செய்தாலும், தனிநபர் விமர்சனங்களையும், தடித்த வார்த்தைகளையும் மக்கள் முன்வைத்தால், அவை வாக்குகளாக சத்தியமாக மாறவே மாறாது என்று ராதாரவிக்கு புரிய வைப்பது யார்? முடிந்தால் பாஜக செய்த சாதனைகளை ராதாரவி தாராளமாக லிஸ்ட் போட்டு சொல்லி வாக்கு கேட்டால் அது நியாயம்.. அதைவிட்டுவிட்டு வாய் இருப்பதால், ஆபாசமாக பேசும் எல்லைக்குகூட செல்வது அழகா? தெரியவில்லை.. இதை தமிழக பாஜக தான் என்ன ஏதென்று கவனிக்க வேண்டும்..!

   
   
   
  English summary
  BJP Radharavi criticizes DMK and Kamalhasan in his campaigns
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X