சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறைவனோட விளையாட்டை பாருங்க.. அன்று எங்க பேனாவை கிண்டல் செய்தீங்க.. இன்று ரூ 80 கோடியில்.. பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: அன்று சரஸ்வதி பூஜையில் நாங்கள் வைக்கும் பேனாவை கிண்டல் செய்தீர்களே ஆனால் இன்று கருணாநிதியின் பேனாவுக்கு ரூ 80 கோடியில் சிலை வைக்கிறீர்கள் என பாஜக நிர்வாகி எஸ்.ஆர். சேகர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டரில் கூறுகையில், இந்துக்களின் நம்பிக்கை என்பது மட்டுமல்ல நடக்கின்ற விஷயமும் ஆகும்..

எல்லா கோயில்களிலும் வீடுகளிலும் இறைவனது படம் முன்பு வீட்டின் மூத்தோர் பெரியோர் சிறு குழந்தைக்கு எழுத்து அறிவிக்க கை பிடித்து நெல்லில் விரலால் எழுத சொல்லி தருகின்ற நாள்.. இதை "வித்யா ஆரம்பம்" என்பார்கள்.

85 வயதிலும் ஸ்பாட்டில் வந்து நின்ற துரைமுருகன்! கருணாநிதியின் சிஷ்யன் என வியந்து நின்ற அதிகாரிகள்! 85 வயதிலும் ஸ்பாட்டில் வந்து நின்ற துரைமுருகன்! கருணாநிதியின் சிஷ்யன் என வியந்து நின்ற அதிகாரிகள்!

 சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை அன்று நம்முடைய படிப்பின் உபகரணங்கள், பாட புத்தகம் , எழுதுகோல், , இவைகளை வைத்து சரஸ்வதியின் முன் பூஜை செய்வது நமது வழக்கம், நம்பிக்கை ..இதை கேலி செய்வது திராவிட மாடலுக்கு வாடிக்கை பொழுதுபோக்கு, ஆனால் இறைவனுடைய விளையாட்டு எப்படி இருக்கிறது பாருங்கள்.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

மறைந்த தமிழக முதல்வர் திரு கருணாநிதி பெரிய எழுத்தாளர். அவருடைய மகனுக்கு அப்பா மீது உயிர். தன் பெயரை தனியாக சொல்வதைவிட அப்பா பெயரோடு சேர்த்து முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லிக் கொண்டு தான் பதவி ஏற்றார். இப்போது தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி என்ற வள்ளுவனின் வாய்மொழியை உண்மையாக்க தந்தைக்காக சென்னை கடலுக்குள்ளே, தந்தையின் ஒரு பெரிய சிலையோ, நினைவுச் சின்னம் அல்ல, மண்டபம் அல்ல.

பேனாவுக்கு சிலை

பேனாவுக்கு சிலை

ஆனால் அவர் எழுதிய பேனாவுக்கு ஒரு சிலை அமைக்க திட்டமிட்டு ரூபாய் எண்பது கோடியில் ... ஆயுத பூஜையில் சரஸ்வதி பூஜையில் வைக்கின்ற பேனாவை மூடநம்பிக்கை என எள்ளி நகையாடும் திராவிட மாடல் ,
அதே பேனாவை தந்தையின் நினைவாக 80 கோடியில் வைப்பது மூடநம்பிக்கையா? முழு நம்பிக்கையா ?
கடவுள் நம்பிக்கையா ? திராவிட நம்பிக்கையா ?

 தோற்று போன திராவிட மாடல்

தோற்று போன திராவிட மாடல்

" திராவிட மாடல்" எப்படி தோற்றுப் போனது ? என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் பார்க்க முடியும் ? இவ்வாறு தனது ட்விட்டரில் பாஜக எஸ்.ஆர். சேகர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான பொருளான பேனாவுக்கு ரூ 80 கோடியில் மெரினா கடற்கரையில் சிலை வைக்க திமுக அரசு முயற்சிக்கிறது. ஆனால் எழுதாத பேனாவுக்கு எதுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ 80 கோடியில் சிலை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

English summary
BJP S.R.Sekar criticises Karunanidhi's pen statue n beach for Rs 80 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X