பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவில் இணைந்த சரத்குமார், பதவி வழங்காத அதிருப்தியில் தன் ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த கட்சிகள் இணையவில்லை. தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கூட்டணியை விட்டு விலகிவிட்டனர். அதிமுக - அமமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடும் இறுதியடையவில்லை. தவெக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை.
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வந்தார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து வந்தார். கடந்த 2024 மார்ச் மாதம் திடீரென சமகவை பாஜகவுடன் இணைத்தார். நள்ளிரவில் தோன்றிய திடீர் எண்ணத்தால் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந்தார்.
பாஜகவில் சரத்குமாருக்கு முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் பாஜகவில் இணைந்து கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்ட நிலையில் எதிர்பார்த்தது போல எந்த பதவியும் கிடைக்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், "நான் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். என்னுடைய ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன்" என சரத்குமார் கூறியிருந்தார்.
ஆனால் தற்போதுவரை சரத்குமாருக்கோ, அவருடைய ஆதரவாளர்களுக்கோ எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. சரத்குமார் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் தியாகராய நகர் பகுதியில் சரத்குமார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது.
இதில் சமகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். பாஜகவில் தொடர்ந்து பயணிக்கலாமா அல்லது நமக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாமா என்பது குறித்து சரத்குமார் ஆலோசித்து முடிவு செய்யவுள்ளதாக கூறப்பட்டது. அவர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சரத்குமார் அளித்துள்ள விளக்கத்தில், "என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழக்கமான நிகழ்வு. பாஜகவில் எனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதால் நான் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக வெளியான தகவல் வதந்தி" என்று கூறியுள்ளார்.
-
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக









Click it and Unblock the Notifications