35 தொகுதிகளை கேட்கும் பாஜக? எடப்பாடி ஒகே சொல்வரா.. அமித்ஷாவுடன் டெல்லியில் நடக்கும் சந்திப்பு
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று இரவு அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவின் இல்லத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே இருமுறை பேச்சுவார்த்தை பாஜக சார்பில் பியூஸ் கோயலிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் அமித்ஷாவின் இல்லத்திற்கே சென்று எடப்பாடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது, ராஜ்யசபா தேர்தலில் யார் யாருக்கு சீட் வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி
வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது அதிமுக பாஜக கூட்டணி. திமுக ஒரு புறம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என கூறி வருகிறது. மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளை வழங்குவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தையினையும் தொடங்கியுள்ளது.
மேலும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே ராஜ்யசபா தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் நேற்று மதுரை மண்டேலாநகரில் என்.டி.ஏ பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அமித்ஷாவுடன் எடப்பாடி ஆலோசனை
மோடி சென்றதும் மதுரையில் பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இந்த ஆலோசனை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்பட்டது.
ஆனால் இதனை தலைவர்கள் மறுத்தனர். பிரதமர் மோடி திருச்சி வரும்போது தான் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி விரைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் அமித்ஷாவின் இல்லத்திற்கு எடப்பாடி மட்டும் வருகை தந்தார்.
எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என்றும், ராஜ்யசபா தேர்தலில் யார், யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 35 தொகுதிகளை பாஜக கேட்பதாகவும் அதற்கு எடப்பாடி சம்மதம் தெரிவிப்பாரா என்றும் சந்தேகம் வலுத்துள்ளது.
முன்னதாக அதிமுக கூட்டணியில், பாஜக 30 முதல் 70 தொகுதிகளை கேட்கிறது என்றும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் பேச்சு அடிபட்டு வருவது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா சந்திப்புக்கு பிறகு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க












Click it and Unblock the Notifications