பத்தினி சாபமே பலிக்காத இந்த காலத்துல.. தெருநாய்.. குஷ்புவை கொந்தளிக்க வைத்த ட்வீட்.. சரியான பதிலடி
சென்னை: நடிகையும் பாஜக முக்கிய நிர்வாகியுமான குஷ்பு, தற்போதுநடிப்பதை விட தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துகளை கூறி வருகிறார். அதேநேரம் திமுக, காங்கிரஸ், தவெக உள்ளிட்டோரால் அடிக்கடி கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அந்த வகையில் ஒருவர் குஷ்புவை தெருநாய் என்று கடுமையான சொற்களால் விமர்சித்தார். இதை கண்டு கொதித்து போன குஷ்பு, அந்த நபரை இனி யாருக்கும் ட்வீட் போடவே கூடாது என்கிற அளவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை குஷ்பு தற்போது பாஜகவின் மாநில துணை தலைவராக இருக்கிறார்.. இவர் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார். தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபட்டு வரும் குஷ்புவை திமுக, காங்கிரஸ், தவெகவினர் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். குஷ்பும் கடும் பதில் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திமுகவில் குடும்ப அரசியல்
அண்மையில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், " கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிவோம். குடும்ப அரசியல் மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சரின் குடும்பத்தினர் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். பெண்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் வேறு எந்த பெண்ணும் வந்தது மாதிரி நான் பார்க்கவில்லை.
விஜய் குறித்து கருத்து
விஜய் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அடுத்த வருடம் தான் தேர்தல் நடக்க உள்ளது. அதை நாம் சொல்லி பிரயோஜனம் இல்லை. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். தேர்தலில் பார்ப்போம். விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை மக்கள் ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம். அதேநேரத்தில் அவர் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
குஷ்பு விஜய்க்கு பதில்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது புதிதல்ல. ஏற்கனவே இருந்தது தான். அதை தங்களின் அரசியலுக்காக காங்கிரஸ் பிரித்தனர். விஜய் என் தம்பியாக இருந்தாலும், கொஞ்சம் அரசியல் வரலாறு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து பேச வேண்டும். பாஜக ஒன்றும் புதிதாக ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வரவில்லை. இருந்ததைத்தான் பாஜக திரும்பி கொண்டு வர முயற்சி செய்கிறது." என்று குஷ்பு கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவை தவெகவினர் விமர்சித்தனர்.
பத்தினி சாபமே பலிக்காது
இந்நிலையில் திமுக குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்தை ஒரு செய்தி நிறுவனம் கார்டாக பதிவிட்டிருந்தது. அதில் குஷ்பு, தேர்தலில் திமுகவிற்கு தோல்வி காத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி அவர்கள் செய்வது போல் காட்டுகின்றனர் என்று கூறியிருந்தார். இதை ரீடுவிட் செய்த திமுக ஆதரவாளர் ஒருவர், பத்தினி சாபமே பலிக்காத இந்த காலத்துல, பாஜக தெரு நாய்கள் சாபம் பலித்து விடுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதை கண்ட திமுக ஆதரவாளர்கள் சிலர், குஷ்புவை வாய் கூசும் வார்த்தைகளால் விமர்சித்தனர்.
தெருநாய் என குஷ்பு பதிலடி
இதனால் கொதித்து போன குஷ்பு, உன்னை பெற்ற உன் அம்மா எந்த தெரு நாய்,? அப்படி கேட்டா தாப்பா இருக்கும், பாவம், உன் அம்மா என்ன தப்ப செஞ்சாங்க?? நீ எந்த தெரு நாய், இது சிறப்பாக இருக்கிறதா" என்று இது எப்படி இருக்கு என்ற பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

போதும் போதும் திமுகவினரே
அதன்பிறகு குஷ்பு இன்னொரு பதிலில், திராவிடியன் ஸ்டாக்குகள் மற்றும் ஜோக்கர்ஸ் என்று அழைக்கப்படும், பயமுறுத்தும் முஞ்சிகள் என்னுடைய ஒரு சொல்லை கேட்டு அதிர்ச்சியடைகின்றன. எனக்கு அவர்களை சங்கடப்படுத்தவும், பேசவும் வைப்பது எனக்குப் பிடிக்கும். இதுபோன்ற முட்டாள்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். போதும் போதும் திமுகவினரே.. உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி












Click it and Unblock the Notifications