பாஜக போடும் தப்புக் கணக்கு! தமிழ்மண் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத பூமி! மருது அழகுராஜ் சுளீர்!
சென்னை: ஒன்றை எதிர்த்து அழிப்பது மற்றொன்றை ஆதரித்து ஒழிப்பது என்னும் இருமுனைத் தாக்குதலை மிக லாவகமாக மேற்கொண்டு வருகிறது பாஜக. குறிப்பாக திமுகவை வீழ்த்தி விட்டாலே ஒட்டுமொத்த திராவிடத்தையே வீழ்த்தி விடலாம் என அது கணக்குப் போடுகிறது எனவும், இதற்காக சீமான், ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களை பயன்படுத்தி வருகிறது என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
நீண்ட இழுபறிகளுக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அதனை உறுதி செய்திருக்கிறார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளையும் புதிதாக சில கட்சிகளையும் சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சியும் பாஜக அதிமுக கூட்டணியில் இணையலாம் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சில முக்கிய தலைகள் காய் நகர்த்தினர் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் அதில் முக்கியமானவர்கள்.
இந்நிலையில், திமுகவை வீழ்த்தி விட்டாலே ஒட்டுமொத்த திராவிடத்தையே வீழ்த்தி விடலாம் என அது கணக்குப் போடுகிறது என என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," ஒன்றை எதிர்த்து அழிப்பது மற்றொன்றை ஆதரித்து ஒழிப்பது என்னும் இருமுனைத் தாக்குதலை மிக லாவகமாக மேற்கொண்டு வருகிறது பாஜக. குறிப்பாக திமுகவை வீழ்த்தி விட்டாலே ஒட்டுமொத்த திராவிடத்தையே வீழ்த்தி விடலாம் என அது கணக்குப் போடுகிறது.
இதற்காக திராவிடத்திலிருந்து தமிழினத்தை பிரித்தெடுக்க நாம் தமிழர் சீமானையும், இரண்டாம் திராவிட பேரியியக்கமான அதிமுகவை NDA மூலம் தன் வசப்படுத்த ஓபிஎஸ், டிடிவி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் தளவாய்சுந்தரம் என ஒற்றர்களை கொண்ட ஊடுருவல் தாக்குதல்களையும் அது நடத்தி வருகிறது.
பணிய மறுப்பவர்களை உடன்பட வைப்பதற்கு income tax, ED, சிபிஜ என சகல ஆயுதங்களையும் அது கையாள்கிறது. ஆனாலும் பாஜகவுக்குபுரியவில்லை தமிழ்மண் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத தக்கான பூமி என்பது. மேல் விவரங்களுக்கு இதே யுக்திகளை முன்னொரு காலத்தில் கையாண்டு களைத்து இளைத்துப் போன காங்கிரஸ் கட்சியிடம் பாஜக கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications