“பிடிஆரும் சபரீசனும் உறவினர்கள்..” ஆடியோ லீக்! ஆளுநர் ஆக்ஷன் எடுப்பதாக சொன்னார் -பாஜக விபி துரைசாமி
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பிடிஆரும் உறவினர்கள்தான் என்றும், அவர்களை பிரிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனவும், பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி உறுதி அளித்து இருப்பதாக அவரை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாடு பாஜகவினர் மனு அளித்தனர். அதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

"நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்து தடயவியல் விசாரணை செய்து இந்த உண்மையை கண்டறிந்து அது அவர் குரல் தானா? அல்லது வேறு ஒருவரின் குரலா? என்று கண்டறியும்படி மாண்புமிகு ஆளுநர் அவர்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டு இருக்கிறது." என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், "இந்த ஆடியோ அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தத்?" என்று கேட்க விபி துரைசாமி, ஒருமையில், உனக்கு எப்படி கிடைத்ததோ அதேபோல் அவருக்கு கிடைத்தது." என்றார். மற்றொரு செய்தியாளர், "இந்த ஆடியோ விவகாரம் எல்லா மட்டத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. பாஜகவிலும் கடுமையாக வந்துகொண்டு இருந்தது. இப்போது இந்த விவகாரமும் வந்துகொண்டு உள்ளது. இதை உறுதிபடுத்துவது எப்படி?" என்றார்.
இதற்கு பதிலளித்த அவர், "அதற்குதான் ஆளுநரிடம் வந்து இருக்கிறோம்." என்றார். மாநில அரசிடம் இதுபற்றி சொல்லி உள்ளீர்களா? முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு, "ஆளுநர்தான் அரசாங்கத்தின் தலைவர். அவரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டோம். நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் சொல்லி இருக்கிறார்." என்றார்.
பிடிஆர் தான் பேசிய ஆடியோ இல்லை என்றும் தடயவியல் ஆய்வறிக்கை வந்துவிட்டதாகவும் கூறி உள்ளார்? என்று செய்தியாளர் கேட்க, "அதை உறுதிபடுத்ததானே இங்கு வந்து உள்ளோம்." என்றார். உடனே அமைச்சரிடம் கேட்கும் இடத்தில் நீங்கள் இல்லையா? என்று செய்தியாளர் கேட்க, "நாங்கள் குற்றம் சொல்கிறோம். அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கட்டும். அவர் குற்றவாளி என்பதை சட்டப்படி நிரூபிக்கிறோம். அவர் குரல்தான் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.

அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்று வெளியிட்டார். மத்திய அரசிடம் எல்லா அதிகாரமும் உள்ளது. நீங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்துவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நீங்கள் வருமானத்தின் மூலதனத்தை காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் அரசின் கஜானாவிற்கு சென்று நண்மையை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் 30 ஆயிரத்தைதான் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்பதுதானே எங்கள் குற்றச்சாட்டு?
ஸ்டாலினையும் பிடிஆரையும் பிரிக்க வேண்டிய அவசியமே இல்லை. பிடிஆரும் சபரீசனும் உறவினர். மக்கள் வரிப்பணம் தனி மனிதனிடம் சென்றுவிட்டதே என்பதுதான் எங்கள் கோரிக்கை. சொத்துக்குவிப்பு பட்டியல் விவகாரத்தில்தான் சிபிஐ யை நாடுவோம் என்று அண்ணாமலை பேசினார். இந்த ஆடியோ விவகாரத்துக்காகவே ஆளுநரை சந்திக்க வந்தோம். இது வேறு. அது வேறு." என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications