பாஜகவுக்கே பல்ப் தரப் போன பனையூர் பண்ணையார்? விஜய் அடித்த விசில் சத்தத்தில் வெடித்த பலமுனை மேட்ச்
சென்னை: தமிழ்நாட்டு அரசியல் இப்போது மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுவரை இருந்த இருமுனைப் போட்டி அரசியல் சூழல், இப்போது பலமுனை போட்டியாக மாறும் நிலை உருவாகியுள்ளது... இந்த மாற்றத்துக்கு மெயின் காரணம் தவெக தலைவர் நடிகர் விஜய் எடுத்துள்ள புதிய அரசியல் அணுகுமுறைகளும், நடவடிக்கைகளும்தான்.. இதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..
தவெக பொறுத்தவரை ஆரம்பத்திலேயே, தன்னுடைய கூட்டணி கதவை திறந்துவிட்டது... சீமான் போல தனித்து போட்டி என்ற அடைப்புக்குள் செல்லாமல், வெளிப்படையாக கூட்டணிக்கும் ஆப்ஷனை தந்துவிட்டது.. விஜயின் இந்த அறிவிப்பானது, மற்ற கட்சிகளுக்கும், ஒருவித நிம்மதி உணர்வை தந்திருந்தது... தங்களது கட்சிகளால் ஒதுக்கப்பட்ட, ஓரங்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் மாற்று வழியை காட்டியதை மறுக்க முடியாது..

தேசிய ஜனநாயக கூட்டணி
அந்தவகையில் தவெக, அமமுக அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுகளும் இருந்தன. அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (இணைவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது... ஆனால் திருமாவளவன் இன்னமும்கூட இந்த பேச்சில் உறுதியாக இருந்து வருவதை இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..
எனினும், சமீப காலமாக விஜய்யின் பேச்சுகளில் இருந்து, அவர் அந்த கூட்டணிக் கதவை மெதுவாக மூடி வருவதாக தெரிகிறது. குறிப்பாக, பாஜகவுடன் இணைந்த பிறகு அதிமுகவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருப்பது முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பனையூர் பண்ணையார்
"ஊழல் சக்தி அதிமுக இனி தமிழ்நாட்டை ஆளக் கூடாது" என்ற விஜய்யின் பேச்சு, அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிமுகவை நேரடியாக அதிகமாக தாக்காத விஜய், இப்போது கடுமையாக பேசுவது, அவர் தனி அரசியல் பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுவதாக தெரிகிறது..
யாரை பார்த்து பனையூர் பண்ணையார் என்று சொல்கிறீர்கள்? விஜய் என்ன கொள்ளை அடித்தாரா? சொந்தமாக உழைத்த சொத்து தானே தவிர, மற்றவர்கள் போல மக்களின் வாயில் அடித்து சேர்க்கவில்லை என்று திராவிட கட்சிகளுக்கு காரசாரமான பதிலை தவெகவினர் தர துவங்கி உள்ளார்கள்..
விசில் சின்னம்
அதுமட்டுமல்ல, இந்த சூழலில், தவெகவுக்கு "விசில்" சின்னம் கிடைத்தது மிக முக்கியமான அரசியல் செய்தியாக மாறியுள்ளது... இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருந்ததாகவும் சலசலக்கப்படுகிறது..
அதாவது தங்களுக்கு விசில் சின்னம் கிடைக்காவிட்டால், தங்களுடன் கூட்டணி சேர விரும்பும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவும் விஜய் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பாஜகவுக்கு அதிர்ச்சியாக இருந்ததால், விரைவாக விசில் சின்னத்தை வழங்க முடிவு செய்ததாகவும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் வருகின்றன... எனினும், இதன் மூலமும், தவெக முழுமையாக தனி அடையாளத்துடன் களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.
பலமுனை போட்டி
இப்போது தமிழகத்தில், இந்தியா கூட்டணி, என்டிஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என பல்வேறு அரசியல் சக்திகள் தனித்தனியாக களத்தில் நிற்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் வருகிற தேர்தலில் பலமுனை போட்டி உறுதி என்றே சொல்லலாம். இந்த நிலை, வாக்குகளை பிரிக்கும். அதே நேரத்தில், புதிய அரசியல் முகங்களுக்கு வாய்ப்பும் உருவாக்கும்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications