சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் புலி பாய்ச்சலில் பாஜக.. 27 பேர் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்க போறாங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. போட்டியில் 4 தலைவர்கள்!- வீடியோ

    சென்னை: பேசுவதற்குச் சமமான வாய்ப்பு கொடுப்பதாக ஊடகங்கள் சொல்லியிருப்பதால் பாஜகவின் சார்பில் இனி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார். விவாதத்தில் பங்கேற்க உள்ள 27 பேரின் பட்டியலையும் அறிவித்துள்ளார்.

    பாஜகவைச் சேர்ந்தவர்கள் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த ஜூலை 2-ம் தேதி அறிவித்து இருந்தார்.

    அவர் அப்போது வெளியிட்டு இருந்த அறிக்கையில், சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

    3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா? 3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

    தமிழிசை அறிவிப்பு

    அதன்படி தற்போது வரை பாஜகவைச் சேர்ந்த யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இனி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என்று அறிவித்து அறிக்கை வெளியிட்டார்.

    அதிரடியான டீம் அமைப்பு

    அதிரடியான டீம் அமைப்பு

    அதில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று கூறியுள்ளார். அவரது ஒருங்கிணைப்பின் கீழ் வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், அரசகுமார், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், அனுசந்திரமெளலி, எஸ்.ஆர். சேகர் உட்பட மொத்தம் 27 பேர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என கூறியுள்ளார். அவர்களின் கருத்து மட்டுமே கட்சியின் கருத்து என்றும் கூறியுள்ளார்.

    இனி பங்கேற்போம்

    இனி பங்கேற்போம்

    இனி ஊடகங்கள் எங்கள் தரப்பினர் பேசுவதற்குச் சமமான வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். எனவே பாஜகவினர் இனி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என தமிழிசை கூறியுள்ளார்.

    விமர்சனங்களுக்கு பதிலடி

    விமர்சனங்களுக்கு பதிலடி

    இதன் மூலம் புலி பாய்ச்சலில் பாஜகவின் ஊடக விவாதங்களில் பங்கேறப்போவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜக மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குஅனைத்து ஊடக விவாதங்களில் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் 27 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. சமூக ஊடகங்களிலும் பாஜகவை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் ஏற்கனவே பாஜகவுக்கு டீம் இருக்கிறது. எனவே சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அடுத்த இரண்டு வருடங்கள் பாஜகவின் செயல்பாடு இருக்கும் என தெரிகிறது.

    English summary
    bjp leader tamilisai soundararajan said, bjp participate tamilnadu media debates from now, 27 persons list here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X