“அண்ணாமலை ஜீரோ.. பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் மண்ணைக் கவ்வும்”.. வெளுத்த எஸ்.வி.சேகர்!
சென்னை: "போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும்." என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூர் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், "ப்ரோ.. ப்ரோ" என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.
நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும்.
அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இவர் முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய எஸ்.வி.சேகர், "அர்ஜுன் சம்பத் ஏற்கனவே பாஜகவில் இணைந்தது போலத்தான் இருக்கிறார். அண்ணாமலை சொல்வதைக் கேட்டு அர்ஜுன் சம்பத் பேசிக் கொண்டிருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications