நீ சாதாரண குடும்பம்! உனக்கு எதுக்குப்பா நீட் தேர்வு? விஜய்யோட polite version! ப்ளூசட்டை தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு என நடிகர் விஜய், கல்வி விருது வழங்கும் விழாவில் கனிவாக கேட்டுள்ளதாக ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஸ்வகர்மா மூலம் குலத்தொழில் ஊக்குவிக்கப்படுகிறது - பாஜக.

vijay neet tamil nadu

ஆடு, மாடு மேய்ப்பதை அரசுத்தொழில் ஆக்குவேன் - ஶ்ரீமான்

சாதாரண குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு? வேறு படிப்பை படியுங்கள் என்பதன் polite version:தான் நீட் மட்டும்தான் உலகமா என விஜய் கேட்டது என அவருடைய பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்துள்ளார்.

விஜய் பேச்சு

மகாபலிபுரத்தில் நேற்று நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: படிப்பில் சாதிக்கணும்தான். அதுவும் சாதனைதான்! அதை நான் மறுக்கவில்லை. அதற்காக குறிப்பாக ஒரே ஒரு படிப்பில் (மருத்துவம்) மட்டும் நாம் சாதித்தாக வேண்டும் என நினைப்பது ஒன்றும் சாதனை கிடையாது.

திரும்ப திரும்ப

ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசித்து உங்கள் கவலையை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். அவ்வளவு stressful ஆக வேண்டிய அவசியம் கிடையாது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீட் மட்டும்தான் உலகமா?

நீட்டை தாண்டிய உலகம் பெரிது

நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரிசு! அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் உள்ளன. எனவே உங்கள் மைண்டை இப்போதே ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகம் என ஒன்று இருந்தால்தான் இந்த உலகமும் சரி, இந்த உலகில் உள்ள துறைகளும் சரி சுதந்திரமாக இருக்க முடியும்.

திணிக்காதீர்கள்

என் அன்பு பெற்றோரே உங்களிடம் ஒரு வேண்டுகோள், உங்கள் குழந்தைகளின் படிப்பில் எதையும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள். அவங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வழி நடத்துங்கள்.
அவரவருக்கு பிடித்த துறையில் எத்தனை தடை வந்தாலும் அவர்கள் சாதிப்பார்கள். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகள்

நடிகர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். இதற்காக 234 தொகுதிகளிலும் அலசி ஆராய்ந்து மாணவர்களை தேர்வு செய்கிறார்.

சொந்த செலவு

அவர்களை தனது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து வருகிறார். அவர்கள் திரும்பி சொந்த ஊருக்கு செல்லும் வரை தவெகவினர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டு, அதாவது கட்சி தொடங்கிய ஆண்டு நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பேசுகையில் "நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

நீட் தேர்வு

நீட் தேர்வில் நான் மூன்று முக்கியப் பிரச்சினைகளைக் காண்கிறேன். முதலாவதாக நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை எப்பொழுது ஒன்றிய அரசு பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வந்ததோ அப்போதுதான் இந்த சிக்கல் ஏற்பட்டது.

நீட் தேர்வு தேவையில்லை

நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு நீட் விலக்கு மட்டுமே. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்டப்பேரவை தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதன் மீது காலதாமதம் செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

vijay neet tamil nadu

நீட் கருத்தில் முரண்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ போன்ற நிறுவனங்களில் வேண்டுமானால் அவர்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும்". இவ்வாறு விஜய் பேசியிருந்தார். ஆனால் இந்த முறை அவரது அணுகுமுறையில் மாற்றம் உள்ளது.

விஜய் மட்டும் நாசுக்காக திணிக்கலாமா

இந்த முறை நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என கேட்காமல், நீட் மட்டும்தான் உலகமா என பேசியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதில் அவர்கள் சாதிக்க விடுங்கள் என அறிவுறுத்திய அவர், எத்தனையோ குழந்தைகளுக்கு மருத்துவராவதுதான் சிறுவயது கனவு என்கிற போது நீட் மட்டுமா உலகம் என கேட்பது முரணாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சி

மருத்துவர் கனவில் இருக்கும் மாணவரை அவருடைய பெற்றோர் எப்படி வேறு துறையில் சேர்க்க முடியும் என்ற கேள்வி அந்த பெற்றோர் மனதிலும் எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+