எம்ஜிஆர் நினைவு நாளில் ரஜினி, கமல் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா.. புளு சட்டை மாறன் கேள்வி
சென்னை: எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி புளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகம் சார்பாக டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது. எத்தனையோ நாட்கள் இருக்கும் போது இந்த நாளை தேர்வு செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சி எங்கு, எப்போது நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகம் சார்பில் வெளியான அறிக்கையில், " திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் அவர்கள் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24.12 .2023 ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக அவர் எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார். நேரடி தமிழ் படங்களுக்கு தமிழில் படத்தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார்.
அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார். தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார்.
அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேக்கவே திரையங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள். அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி, என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.
கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர். இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கலைஞானி கமலஹாசன் அவர்களும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், இசைஞானி இளையராஜா அவர்களும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.
இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது. இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களும், மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்த மாபெரும் விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அனைத்தும் திரை உலகினருக்கும், பொதுமக்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தமிழ் திரையுலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி புளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகம் சார்பாக டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது. டிசம்பர் 24..முன்னாள் முதல்வரும், நடிகர் சங்கம் உருவாக முக்கியமானவர்களில் ஒருவராகவும் இருந்த எம்.ஜி.ஆரின் நினைவு நாள்.
ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வீட்டு வாசல் மற்றும் தெருமுனைகளில் வைத்தும், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பாடல்களை ஒலிபரப்பியும் மரியாதை செய்கிறார்கள் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள். எத்தனையோ நாட்கள் இருக்கும்போது.. இந்த நாளை தேர்வு செய்து நிகழ்ச்சி நடத்துவது ஏன்?
-
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications