10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் எழுதவேண்டும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி
புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி மாணவர்களிடம் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறினார். தமிழகத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வியாண்டில் கட்டாயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

கண்ணும் கருத்துமாக கவனம்
மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கூறிய அன்பில் மகேஷ், புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு அறிவிப்பு
ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் மற்றும் அப்போதைய சூழல் குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

கட்டாயம் தேர்வு நடைபெறும்
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியுள்ளார்.

ரத்தான பொதுத்தேர்வு
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2019 - 20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டது. கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications