கிண்டி ஆளுநர் மாளிகையில் காலையிலேயே பரபரப்பு! அக்டோபரில் மட்டும் 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பெற்றோர் பதறி போய் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பள்ளிகளுக்கு படையெடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சோதனையில் அது புரளி என தெரியவந்தது.

இந்த நிலையில் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு நிறைய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை சோதனை செய்ததில் புரளி என தெரியவந்தது. எனினும் இமெயில் அனுப்பிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அது போல் அண்மையில் பாஜக முன்னாள் நிர்வாகி எஸ்.வி.சேகரின் வீட்டிற்கு 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வீடு, த்ரிஷா வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதிலும் புரளி என தெரியவந்தது.
பின்னர் நடிகை சுவர்ணமால்யா வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. தற்போது ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மெயிலில் வந்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு 4 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications