சென்னை - திருச்சி - மதுரை.. 3 மத்திய சிறைகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்.. அலர்ட்டான போலீஸ்
சென்னை: சென்னை, திருச்சி, மதுரையில் உள்ள 3 மத்திய சிறைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு , கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று போன் செய்து பேசிய நபர் திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை புழல் மத்திய சிறை, திருச்சி மத்திய சிறை, மதுரை மத்திய சிறை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்தார்.

இந்த தகவலை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை சார்பில் சம்பந்தப்பட்ட சிறைத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை புழல் சிறையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் திருச்சி மற்றும் மதுரையில் உள்ள மத்திய சிறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை இந்த சம்பவத்தால் சென்னை புழல், திருச்சி, மதுரை மத்திய சிறைகளில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் சிறைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அதோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடும் பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக போன்கால் வந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த செல்போன் எண் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சமீபகாலமாக விமான நிலையம், பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது சிறைச்சாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications