மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
இது தொடர்பாக, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

தேணாம்பேட்டை போலீஸ்
இந்த சோதனையின் போது வெடிகுண்டு எதுவும் இல்லை என போலீஸார் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக திருக்கோவிலூரைச் சேர்ந்த நபரை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன்னர் வேறு யாரேனும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பதையும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
இதே போல் கடந்த 2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த போது அவரது ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை காவல் துறை ஆணையரகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டை வீச போவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.

தீவிர சோதனை
இதையடுத்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீஸார் ஆழ்வார்பேட்டை வீடு மற்றும் கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் வீட்டிலும் நள்ளிரவில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அது புரளி என தெரியவந்தது. அதே போல் கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரது கோபாலபுரம் வீட்டிற்கு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அதிகாலை குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டும் மிரட்டல்
வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் போன் செய்த மொபைல் எண்ணுக்கு போன் செய்து பார்த்த போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பின்னர் தாம்பரத்தில் மொபைல் போன் கடையில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட சிம் கார்டு மூலம் சேலையூரை சேர்ந்த ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications