"பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் உள்ளது வி.ஆர் எனப்படும் ஷாப்பிங் மால். இங்கு தியேட்டர்கள், பெரிய துணிக் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு கடைகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்த மாலுக்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். அது போல் வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த மால் 6 அடுக்குகளை கொண்டுள்ளது. இந்த ஷாப்பிங் மாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மால் நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து திருமங்கலம் போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸாரும் மாலில் தேடி வருகிறார்கள். அண்மைக்காலமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும், கோயில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் வெடிகுண்டு நிபுணர்களின் தேடுதல் வேட்டையில் அது வதந்தி என தெரியவந்தது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாண்டம் என்ற நெட்வொர்க்கில் இருந்து மெயில் அனுப்பப்பட்டதால் ஐபி முகவரியை கண்டறிய முடியவில்லை என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications