சென்னையில் வினோத நம்பிக்கை.. திடீரென வீடுகள் முன் தொங்கும் நீலநிற தண்ணீர் பாட்டில்கள்.. ஏன்?
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி கேட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலைகளில் செல்வோரை விரட்டி விரட்டி தெருநாய்கள் கடிப்பதோடு, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி வருகிறது. இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல.

சென்னையிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சில இடங்களில் வீட்டு கதவுகள் திறந்து வைத்திருந்தால் உள்ளே தெருநாய்கள் நுழைந்து விடுகின்றன.
இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை சாலி கிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளில் தெருநாய்கள் மற்றும் பூனைகள் நுழைவதை தடுக்க மக்கள் வித்தியாசமான செயலை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி சாலி கிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளின் கேட் கதவுகளில் சிறிய பாட்டில்களில் நீலநிற தண்ணீர் நிரப்பி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. காவேரி ரங்கன் நகர் எம்ஜிஆர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தான் இப்படி செய்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் தெருநாய்கள், பூனைகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியதோடு, அந்த இடத்தை அசுத்தம் செய்து செல்கின்றன. இதனை தடுக்க தான் அவர்கள் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீரை கட்டி தொங்கிவிட்டுள்ளனர். இப்படி செய்வதன் மூலமாக தங்கள் வளாகத்துக்குள் தெருநாய்கள், பூனைகள் நுழையாது என்பது அவர்களின் நம்பிக்கை.
இதுபற்றி அங்குள்ள காவலாளி கூறுகையில், ‛‛நீலநிற தண்ணீர் பாட்டில்களை கட்டி தொங்கவிட்ட பிறகு தெருநாய்கள், பூனைகளின் தொல்லை இல்லை'' என்று கூறினார். ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் இதனை மறுக்கின்றனர். ‛‛தெருநாய்கள், பூனைகள் இப்போது வளாகத்துக்குள் வந்து அசுத்தம் செய்கின்றன'' என்றார்.
சென்னை சாலிகிராமம் மட்டுமின்றி பல இடங்களில் இப்படியான நம்பிக்கை உள்ளது. வீடுகள் முன்பு பாட்டிலில் நீலநிற தண்ணீரை வைப்பதன் மூலம் தெருநாய், பூனைகள் வராது என்று இத்தகைய செயல்களை செய்து வருகின்றன. ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும் கூட அங்குள்ள பலரும் ஆணித்தனமாக நம்புகின்றனர். இதற்கு அந்த 3 அடுக்குமாடி குடியிருப்புகளின் கேட்டுகளில் வரிசையாக ஏராளமான பாட்டில்கள் நீலநிற தண்ணீர் நிரப்பி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதே சான்றாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications