Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலின் கழிவறையில் பயணம் செய்த கல்யாண பொண்ணு.. தீயாய் பரவும் மணப்பெண் வீடியோ.. ஓடோடி வந்த ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் புதுமணப்பெண் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து ரயில்வே ஓடோடி வந்து பதில் தந்துள்ளது.

சமீப நாட்களாகவே, பல ரயில் பயணிகள் ரயில்களின் மோசமான நிலையை காட்ட, அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பயணிகள் பதிவிட்டு வருகிறார்கள்.. முக்கியமாக கூட்ட நெரிசல் மற்றும் டிக்கெட் இல்லாத பயணிகள் கூட இருக்கைகளை ஆக்கிரமிப்பது போன்றவை ரயில் பயணத்தை மோசமாக்கியுள்ளன.

train indian railway toilet

ரயில்வே வீடியோ: அதேபோல, ​​இந்திய ரயிலில் உள்ள கழிவறையின் நிலைமையையும் வீடியோவாக வெளியிட்டு வருவது, பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்புகூட, இரினா மோரேனோ என்பவர் இன்ஸ்டாகிராமில், இந்திய ரயில்வேயின் மோசமான கழிப்பறை வீடியோவை பகிர்ந்திருந்தார்.. சுத்தம் செய்யப்படாமல், பராமரிப்பின்றி காணப்பட்ட அந்த ரயிலின் வீடியோவானது, இணையத்திலும் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக சில வழக்குகள்கூட நீதிமன்றம்வரை செல்வதுண்டு.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி. என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தன்னுடைய குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார். 3-வது AC வகுப்பில் மூர்த்தி பயணம் செய்தார்.

பயணி புகார்: அப்போது அவர் பயணித்த பெட்டியின் கழிப்பறை மோசமான நிலையில் இருந்தது. பாத்ரூமில் தண்ணீரும் வரவில்லை... அவர் பயணித்த ரயில் பெட்டியின் ஏ.சி.யும். சரியாக வேலை செய்யவில்லை. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் மூர்த்தி புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை..

எனவே, ஏ.சி. பிரச்சினை, பாத்ரூமில் தண்ணீர் வராதது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மூர்த்தி, விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, மூர்த்திக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்குமாறு தென் மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) மண்டலத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

புதுமணப்பெண்: இந்நிலையில், மீண்டும் ஒரு ரயில் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.. அதாவது, ரயிலில் உட்காருவதற்கு சீட் இல்லாததால், தரையில் கழிவறை அருகே ஒரு மணப்பெண் உட்கார்ந்து பயணம் செய்திருக்கிறார்.. சிவப்பு நிற சேலையில் முகம், தலையை போர்த்தியவாறு, கழிவறை அருகே அந்த பெண் அமர்ந்திருக்கிறார்.

புதுமணப்பெண் கழிவறை அருகே தரையில் உட்கார்ந்திருப்பதை கண்டு, இணையவாசிகள் கொந்தளித்து விட்டனர்.. ,இது பரபரப்பானயும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.. அதில் ஒருவர், "அன்புள்ள பெற்றோர்களே, உங்கள் மகளுக்கு ஒழுக்கமான வாழ்க்கை முறையை தர முடியாத ஒருவருக்கு தயவு செய்து உங்கள் பெண்ணை கல்யாணம் செய்து வைக்காதீங்க" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கமெண்ட்கள்: இன்னொரு நபரோ, "இந்தியாவில் தனிப்பட்ட ஒருவரின் வருமான வரி செலுத்தும் தன்மையை வைத்தே செக்ஸ் மற்றும் திருமணம் போன்றவற்றை அனுமதிக்கப்பட வேண்டும். வருமானம் இல்லையென்றால், திருமணமும் கிடையாது" என்று காட்டமாக கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு இணையவாசி, நேரடியாக இந்திய ரயில்வே அமைச்சரையே சாடியிருக்கிறார்.. "மிக்க நன்றி அஸ்வினி வைஷ்ணவ், உங்களால்தான் ஒரு புதுமணப்பெண் உலகத்தரம் வாய்ந்த ரயில் வசதியைப் பெறுகிறார். நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ரயில்வே பதில்: இந்த வீடியோ மற்றும் கருத்துக்களை கண்ட இந்திய ரயில்வே, உடனடியாக பதில் அளித்திருக்கிறது.. அதில், உடனே உங்களின் PNR எண்ணை வழங்குங்கள் விசாரித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில்கூட, நெல்லையிலிருந்து சென்னை சென்ற, வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்திருந்தார்.. உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்திருந்தது.. எனவே, ரயிலில் பயணம் செய்யும் போது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்திய ரயில்வே உதவி எண் 139ஐ அழைக்கலாம். கட்டணமில்லா எண் 139 பல்வேறு சேவைகளை வழங்குவதால், தொலைபேசி அழைப்புகள் செய்வதோடு கூடுதலாக இந்த எண்ணுக்கு SMS அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+