Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்ற 8 பேர் - யார் அவர்கள்? முழு விபரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகாக உள்ள 9 பேரில் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்ற நிலையில், புதிய நீதிபதிகளின் நீதித்துறை அனுபவத்தை தற்போது காண்போம்.

அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.

நீதிபதி சத்திகுமார் வேறு ஒரு நாளில் பதவி ஏற்பார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றதில் நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்து உள்ளது.

ஜி.சந்திரசேகரன்

ஜி.சந்திரசேகரன்

1962 மே 31ல் பிறந்த ஜி,சந்திரசேகரன், 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானார். பின்னர் சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை, முசிறி, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சென்னை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஜி.சந்திரசேகரன்.

வி.சிவஞானம்

வி.சிவஞானம்

1963 ஜனவரி 1 ஆம் தேர் பிறந்தவர் வி.சிவஞானம். 1991 ஜூலை மாதம் நீதித்துறைக்கு தேர்வான சிவஞானம், மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக்கல், பவானி, துறையூர், அரியலூர், கடலூர், பன்ருட்டி, பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.

ஜி.இளங்கோவன்

ஜி.இளங்கோவன்

ஜி.இளங்கோவன் 1963 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வான அவர், கோவை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருமங்கலம், மதுரை, உத்தமபாளையம், குளித்தலை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட உள்ள மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றி இன்று உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

 எஸ்.ஆனந்தி

எஸ்.ஆனந்தி

1960 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி பிறந்தவர் நீதிபதி எஸ்.ஆனந்தி. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதித்துறைக்கு தேர்வானவர். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், தென்காசி, சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், சென்னை, திருச்சி நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய நீண்ட அனுபவம் எஸ்.ஆனந்திக்கு உள்ளது.

எஸ்.கண்ணம்மாள்

எஸ்.கண்ணம்மாள்

நீதிபதி எஸ்.கண்ணம்மாள் 1960 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி பிறந்தவர். 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நீதித்துறைக்கு தேர்வானவர். கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, சங்ககிரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்சேங்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்

 எஸ்.சதிக்குமார்

எஸ்.சதிக்குமார்

1963 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பிறந்தவர் நீதிபதி எஸ்.சதிக்குமார். 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீதித்துறைக்கு தேர்வான அவர், சிவகங்கை, திருவொற்றியூர், சேலம், கள்ளக்குறிச்சி, பொன்னேரி, செஞ்சி, பவானி, சென்னை, அரூர் உள்ளிட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி இருக்கிறார். இன்றைய தினம் இவர் மட்டும் பதவியேற்கவில்லை.

 கே.முரளி சங்கர்

கே.முரளி சங்கர்

நீதிபதி கே.முரளி சங்கர் 1968 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி பிறந்தவர். 1995 ஆம் ஆண்டு நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வாகி இருக்கிறார். பின்னர் கும்பகோணம், கோவை, சேலம், சங்ககிரி, பாபநாசம், கொடுமுடி, தாராபுரம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்திருக்கிறார் கே.முரளி சங்கர்.

 ஆர்.என்.மஞ்சுளா

ஆர்.என்.மஞ்சுளா

1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி பிறந்தவர் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா. 1995 நவம்பரில் இவர் நீதித்துறைக்கு தேர்வானவர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாங்குனேரி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ள இவர் இன்று உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

டி.வி.தமிழ்ச்செல்வி

டி.வி.தமிழ்ச்செல்வி

நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி பிறந்தவர். 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீதித்துறைக்கு தேர்வாகி உள்ளார். இவர் ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

 மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்கள்

மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்கள்

நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுள்ள உள்ள 8 பேரும், மாவட்ட நீதிபதியாக இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். இன்று பதவியேற்றுள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நீதிபதிகள் முரளிசங்கர், தமிழ் செல்வி ஆகியோர் கணவன்- மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+