கிளாம்பாக்கம், கோயம்பேடுக்கு அண்ணன்.. பிராட்வே மாறுது.. ராயபுரத்தில் ரெடியான தற்காலிக பஸ் நிலையம்
சென்னை: ஒரு காலத்தில் பெங்களூர் மெஜஸ்டிக் போல் சென்னை பிராட்வே இருந்தது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. இப்போது அங்கிருந்து கிளாம்பாக்கம் போய்விட்டது. தற்போது பிராட்வேயில் புதிய போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.823 கோடியை ஒதுக்கியுள்ளது. பிராட்வேக்கு பதில் ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் வரும் ஜூன் 2-வது வாரத்தில் திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூர் மெஜஸ்டிக் போல் சென்னையின் பழமையான பஸ் நிலையமாக பிராட்வே பஸ் நிலையம் இருந்தது. கடற்கரை ரயில் நிலையமும், பிராட்வே பேருந்து நிலையமும் மிக அருகில் உள்ளன. அதேபோல் அதன் அருகில் தான் சென்ட்ரல் ரயில் நிலையமும், எழும்பூர் ரயில் நிலையமும் உள்ளது. இதனால் எல்லாருமே பிராட்வேக்குதான் அந்த காலத்தில் வருவார்கள். மக்கள் தொகை நெருக்கம் அதிகமானதால், பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு 2003ம் ஆண்டு மாற்றப்பட்டது.

அடுத்த 20 வருடத்தில் கோயம்பேடும் தாங்க முடியாத நெரிசலில் சிக்கியதால், இப்போது வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னையின் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தில் டவுன் பஸ்கள் மட்டும் வந்து செல்கின்றன. சென்னையில் முக்கிய இடமான பிராட்வேயில், தற்போது உள்ள பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, அதற்கு பதில், ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.823 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இதற்காக பிராட்வே பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் குறளகம் கட்டிடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்ள போகின்றன. அதேநேரம் மக்கள் வந்து செல்ல பிராட்வே பஸ் நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அங்கு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்திருந்தது.
இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, பிராட்வே பஸ் நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்தில் உள்ள சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தற்காலிக பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை ராயபுரம் தற்காலிக பஸ் நிலையம் 3.45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு முழுமையாக தார்சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டது. பயணிகள் நிழற்குடை, பயணிகள் அமர்விடம், கழிப்பறை ஆகியவை அமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. அதேபோல் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஓய்வறை, டிக்கெட் கவுண்ட்டர்களும் அமைத்து வருகிறோம். இந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே ஜூன் மாதம் 2-வது வாரத்தில் ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். பஸ் சேவைகள் முழுமையாக பிராட்வேயில் இருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகே பிராட்வே பஸ் நிலையம், குறளகம் உள்ளிட்டவை இடிக்கப்படும்" இவ்வாறு கூறினார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications