தமிழ்நாட்டிற்கு வரப்போகும் கூடுதல் வந்தே பாரத்.. புதிய ரயில்கள்.. மத்திய பட்ஜெட்டில் செம சர்ப்ரைஸ்?
சென்னை: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Dailyhunt உடன் இணைந்திருங்கள்.

2024 லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால்.. ஜூலை வரைக்குமான பாதி பட்ஜெட் தாக்கல் மட்டும் தற்போதைக்கு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லோக்சபா தேர்தல்களில் வெற்றிபெற்ற மத்திய பாஜக அரசு.. மூன்றாவது தேர்தலில் வெற்றிபெறும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வர வாய்ப்புகள் உள்ளன.
இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை மீதான வரி குறைப்பு, கலால் வரி குறைப்பு, தனி நபர் வருமான வரி குறைப்பு ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மிக முக்கியமாக பல்வேறு ரயில்வே தொடர்பான அறிவிப்புகள், இஸ்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய விமான நிலையங்கள், எக்ஸ்பிரஸ் வே தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே: முக்கியமாக 2024-25 யூனியன் பட்ஜெட்டில் ரயில்வே துறை அதிக ஒதுக்கீட்டைக் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வந்தே பாரத் சேவைகள், புதிய நீண்ட தூர சேவைகள், ரயில்வே சொத்துக்களை மறுசீரமைத்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 இல் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிக ஒதுக்கீடு ஆகும் இது. இந்த ஆண்டு நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்புக்கு அதை விட அதிக ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. நடப்பு நிதியாண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 1.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத்: புத்தம் புதிய வந்தே பாரத் ரயில்களின் துவக்கம், ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்பு மற்றும் புதிய பாதைகள் அமைத்தல் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில்தான் இன்று சென்னை - திருநெல்வேலி இடையே புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பரிந்துரை முன்னதாக தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டது. 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் கோயம்புத்தூருக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - கோவை இடையே ஏற்கனவே வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே விரைவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications