பள்ளிகள் திறக்க 1 வாரமே உள்ள நிலையில்.. மாணவர்களுக்கு பறந்த அசத்தல் குட்நியூஸ்.. இதுதான் முக்கியம்!
சென்னை: பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க அரசு பேருந்துகளில் மாணவ , மாணவியர் இலவசமாக பயணிக்க பாஸ் வசதி உள்ளது. அதாவது மாணவ, மாணவியர் இலவசமாக பேருந்துகளில் பள்ளிக்கு செல்ல வசதியாக இந்த பாஸ் வசதி அமலில் உள்ளது.

மாணவர்கள் எல்லோரும் பள்ளிக்கு செல்ல வேண்டும். பேருந்தில் செல்ல காசு இல்லாமல் யாரும் பள்ளிக்கு செல்வதை நிறுத்த கூடாது என்று இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் எப்போதும் வட மாநிலங்களுக்கு தென் மாநிலங்கள்தான் முன்னோடி. ஒப்பீட்டளவில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்களில்தான் அதிகளவிலான வளர்ச்சி திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்படும் பல முற்போக்கான திட்டங்கள் பல வருடங்கள் கழித்துதான் வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வளர்ச்சி திட்டங்களில் பல மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் எப்போதும் ரோல் மாடல்!
முக்கியமாக இலவச லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ், அம்மா உணவகம், சத்துணவு போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்களாக அமைந்தன. அதேபோல் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் போன்ற தமிழ்நாடு அரசின் பல திட்டங்கள் மொத்த நாட்டிற்கும் எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களை பார்த்து வடஇந்திய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது பல முறை நடந்துள்ளது.
காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை பார்த்து தாங்கள் ஆளும் மாநிலங்களிலும் வாக்குறுதிகளை வழங்கிய சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளது. அதில் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள திட்டங்களில் ஒன்றுதான் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்.
முறைகேடு: ஆனால் இதில் மாணவர்கள் பஸ் பாஸுடன் வந்தால் அவர்களை பல நடத்துனர்கள் பேருந்தில் ஏற்றுவது இல்லை. பல இடங்களில் மாணவர்களை இறக்கி விடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல் பாஸ் வைத்து இருக்கும் மாணவர்கள் இருக்கைகளில் அமர கூடாது என்றும் நடத்துனர்கள் கூறுகின்றனர்.
பாஸ் வைத்து இருக்கும் மாணவர்கள் இருக்கையில் அமர்வதால் நிற்க விருப்பம் இன்றி மக்கள் அரசு பேருந்துகளுக்கு வருவது இல்லை. இதனால் அரசு பேருந்து நடத்துனர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மாணவர்கள் பஸ் பாஸுடன் வந்தால் அவர்களை பல நடத்துனர்கள் பேருந்தில் ஏற்றுவது இல்லை. பல இடங்களில் மாணவர்களை இறக்கி விடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதையடுத்து பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முக்கியமாக சீருடை அணிந்திருந்து அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications