திண்டிவனமே நேராக தாம்பரம் வர முடியாது.. கிளாம்பாக்கம் வரை பேருந்துகள்.. தவறாக வெளியான செய்திகுறிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு தவறானது என்பது தெரியவந்துள்ளது. வேலூர், திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி என அண்டை மாவட்ட பேருந்துகளும் கிளாம்பாக்கத்தை தாண்டவில்லை என்பது தான் உண்மை.

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கிடையே அந்த செய்திக்குறிப்பு தவறாக அனுப்பப்பட்டுவிட்டது என்பது தெரியவந்துள்ளது. இதை உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Kilamabakkam tambaram Chennai

ஏனெனில், தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படக்கூடிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் (எஸ்இடிசி) ஏற்கனவே தாம்பரத்திற்கு செல்வதே கிடையாது. வெகுசில பேருந்துகளே (டிஎன்எஸ்டிசி), அதுவும் விழுப்புரம் சரக பேருந்துகளே தாம்பரம் வரை வந்து சென்று வந்தன. அந்த பேருந்துகளும், திருச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 550 நடைகளில் இயக்கப்படக் கூடிய 350 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் (டி.என்.எஸ்.டி.சி.) தாம்பரம் வரை இயங்கிவந்தன. அந்த பேருந்துகளும் தாம்பரம் செல்லாமல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது திண்டிவனத்தில் இருந்து சென்னை வரும் ஒருவர்,அண்டை மாவட்டமான செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து தாம்பரத்திற்கு ஒரு பேருந்தில் ஏற வேண்டும். அதன்பிறகு போக வேண்டிய இடத்திற்கு போக வேண்டும்.. ஏனெனில் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் போதிய பேருந்து வசதிகள் இல்லை.. குறிப்பாக உள்காட்டு பகுதிகளுக்கு அந்தஅளவிற்கு கிடையாது. உதாரணமாக சொல்வது என்றால் அனகாபுத்தூர், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், ஆலப்பாக்கம் என சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் கிடையாது.இவர்கள் தாம்பரம் வந்து தான் மாறி ஏறிவர வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர், வடசென்னை மக்கள் பேருந்துகளை பிடிக்க பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். கோயம்பேடு தாண்டி உள்ள பாடி, வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், அயனாவரம், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், தண்டையார் பேட்டை, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதி மக்கள் கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து வந்து தான் சொந்த ஊர் செல்ல முடியும்.

அதுவும் திண்டிவனம், வேலூரில் இருந்து தாம்பரம் வழியாக செல்ல விரும்புவோர். முதலில் கிளாம்பாக்கம் வந்து,அதன்பிறகு தாம்பரம் வந்து, அதன் பிறகு ரயிலில் ஏறி பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள்.. முன்பு தாம்பரம் ரயில் நிலையம் வரை எளிதாக வந்துவிடுவார்கள். அங்கிருந்து ரயிலில் ஏறி வேண்டிய இடங்களுக்கு எளிதாக சென்று வந்த மக்கள், இப்போது குழந்தைகள், பைகளுடன் பெரும் சிரமத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் வேலை செய்து திறந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்கிறார்கள் மக்கள்.

நேற்று முதல் திருச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திண்டிவனத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த 350 அரசு பஸ்கள் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில்கொண்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை 589-ல் இருந்து 693 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 3,795 ஆக இருந்த பயண நடைகள் 4,611 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+