Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோதிக்காதீங்கடா.. கடுப்பில் கத்திய புசி ஆனந்த்! விஜய் கல்வி விருது விழாவில் பரபர! ரசிகர்களால் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கும் நிகழ்ச்சியில் ஆங்காங்கே நின்றுகொண்டு இருந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை மக்கள் முன்பாகவே புசி ஆனந்த் அதட்டினார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 2022 - 2023 கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான முடிவுகள் கடந்த மே 19 ஆம் தேதி வெளியாகின.

இதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அனைவரையும் வியப்படைய செய்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளையும் வழங்கினர். முதலமைச்சர் முக ஸ்டாலினும் நந்தினியை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

Bussy Anand shouted at Vijay Makkal Iyakkam executives in education award function

அதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில்தான் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் நேரில் பரிசளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், ""ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது! "தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "பத்து மற்றும் பணிரெண்டாம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த வகையில் இன்று பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பெற்றோர்கள், மாணவர்களுடன் அரங்கில் குழுமி இருக்கின்றனர். அரங்கம் நிறைந்து காணப்படும் நிலையில், புஸ்ஸி ஆனந்த் மைக் மூலம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார்.

அப்போது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆங்காங்கே நின்றுகொண்டு நாற்காலியில் அமர்ந்தபடியும் இருந்ததாக கூறி அவர்களை வருமான மைக்கில் அழைத்தார் புஸ்ஸி ஆனந்த். நிர்வாகிகள் அனைவரும் தயவு செய்து இந்த பக்கம் வாருங்கள் என்று பல முறை அழைத்தார். ஆனால், சிலர் அங்கேயே அமர்ந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

"மாவட்ட தலைவர், அணி தலைவர்கள் வாருங்கள். தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள். யார் யாரெல்லாம் நடுவில் அமர்ந்துள்ளீர்களோ அவர்கள் வாருங்கள்." என்று பல முறை அழைத்தும் அவர்கள் வராததால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த, நிர்வாகிகள் எல்லாம் ஏன் அங்கு நிற்கிறீர்கள், இங்க வாங்க.. வா.. வா!" என்று மைக்கிலேயே கோபமாக கத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+