பாய்ந்த சிவி சண்முகம்.. "3ம் கட்ட தலைவர்".. வாயை விட்ட அண்ணாமலை.. சல்லி சல்லியான அதிமுக + பாஜக உறவு
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில் சிவி சண்முகத்திற்கும் - அண்ணாமலைக்கும் இடையில் வெளிப்படையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக மெகா கூட்டணி அமைக்க போவதாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில்தான் தற்போது அதிமுக + பாஜக கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும்.
அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

கூட்டணி
இந்த நிலையில் பாஜக கூட்டணியை முறித்துவிட்டு எடப்பாடி காங்கிரசுடன் கூட்டணி வைக்க போவதாக செய்திகள் வந்தன. அதாவது அதிமுக + காங்கிரஸ் + விசிக சேர்ந்து கூட்டணி வைக்கும். இந்த கூட்டணியைத்தான் எடப்பாடி மெகா கூட்டணி என்று கூறுகிறார். அவரின் மெகா கூட்டணியில் பாஜகவிற்கு இடம் இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தன. சமீபத்தில் கூட, பாஜகவை ஒருநாள் எடப்பாடி பழனிசாமி கழற்றிவிட்டுவிடுவார், அதனால் எடப்பாடி மீது மோடிக்கு சந்தேகம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

ஒன்இந்தியா அரசியல்
எடப்பாடி வேணும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். ஆனால் எடப்பாடி மட்டும் போதும் என்று பாஜக நினைக்கவில்லை. எடப்பாடி கழற்றிவிட்டு செல்வதில் மாஸ்டர். அவர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிட்டு செல்வார். அது பாஜகவிற்கும் தெரியும். மோடியை எடப்பாடி ஒரு காலத்தில் கழற்றிவிடுவார். அதுதான் என் கருத்து. எடப்பாடி மீது மோடிக்கு சந்தேகம் இருக்கிறது. நம்மை கழற்றிவிட்டுவிடுவார் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் எடப்பாடி காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளை சேர்த்து மெகா கூட்டணி உருவாக்க பார்க்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

உறுதியானது
இதைத்தான் உறுதி செய்யும் விதமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சிவி சண்முகம் நேற்று பேசினார். அதில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள். விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது. திமுகவிற்கு பிரஷர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார்.

அண்ணாமலை
இந்த நிலையில்தான் சிவி சண்முகத்தை விமர்சனம் செய்துள்ள அண்ணாமலை கடுமையாக தாக்கி உள்ளார். நான் இன்னும் சென்னை பாஜக ஆபிஸ் செல்லவில்லை. சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என்ன? நான் போய் பார்க்கவில்லை. பாஜக கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் பாஜகவில் இருக்க வேண்டும். அவர் என்ன பாஜகவில் இருக்கிறாரா? அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேச அந்த கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். யாரோ 3ம் கட்ட தலைவர்கள் பாஜகவின் கூட்டணி பற்றி பேசலாமா. அவர் பாஜகவின் கூட்டணி பற்றி பேசுகிறார் என்றால் அவர் ஒன்று பாஜகவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அண்ணாமலை விமர்சனம்
அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக + பாஜக கூட்டணி முற்றிலுமாக முறிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவி சண்முகம் தீவிர எடப்பாடி ஆதரவாளர். சிவி சண்முகம் ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடியின் தீவிர ஆதரவாளரை, மாஜி அமைச்சரை மூன்றாம் கட்ட தலைவர் என்று அண்ணாமலை சொல்லி இருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்யும் சிவி சண்முகத்தை அண்ணாமலை எதிர்த்து இருப்பதால், எங்கே ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அண்ணாமலை இருக்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எடப்பாடி
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்.. சென்னை வந்த அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார். அப்போதே கூட்டணி குறித்த மோதல்கள் விவாதம் ஆனது. தற்போது அண்ணாமலை, சிவி சண்முகம் பேச்சால் அதிமுக + பாஜக கூட்டணி மொத்தமாக முடிகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்











Click it and Unblock the Notifications