உதயநிதிக்கு ஏற்றம்.. துரைமுருகனுக்கு ஏமாற்றம்.. அமைச்சரவை மாற்றம் குறித்து தமிழிசை சுளீர்
சென்னை: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்றும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமாகி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறை செய்தி வேகமாக பரவும் போதும், அதனை முதல்வர் ஸ்டாலின் மறுத்தே வந்தார். அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையே பலமுறை திமுகவின் மூத்த அமைச்சர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளன. இதில் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை என்பது மகளிர் உரிமை தொகை தொடங்கி திமுக அரசு 2021ம் அறிவித்த அனைத்து சமூக நலத்திட்டங்களும் உதயநிதி ஸ்டாலின் கையில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறையில், தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வந்துவிடும். எனவே உதயநிதி கிட்டத்ட்ட எல்லா துறைகளிலும் உதயநிதி ஸ்டாலின் முடிவெடுக்க முடியும் என்கிற நிலைதான் தற்போது உள்ளது. எனினும் கிட்டத்தட்ட இது முதல்வருக்கு நிகரான அதிகாரம் ஆகும். எனினும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படவில்லை..
ஒருமுறை இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, 'உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை' என்று கூறினார். இதனிடையே முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு விடுவார் என்று கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப ஆகஸ்டு 19-ந் தேதி அன்று துணை முதல்வராகக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அப்படி ஏதுவும் நடக்கவில்லை.. தற்போதைய நிலையில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்த பின்னரே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், அப்போது தான் துணை முதல்வர் பதவியை உதயநிதி ஏற்பார் என்றும் சில மூத்த ஊடகவியலாளர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) கலந்து கொண்டார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என தெரிவித்தார். இதன்மூலம் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும் போது, " யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதல்வர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் எப்போது பதவி ஏற்பார் என்பது குறித்த கேள்விக்கு கட்சியின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் கடந்த இரண்டு நாள் முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மறுத்துவிட்டார் . ராணிப்பேட்டை அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அணைகள் தொடர்பாக, நீர்பாசனம் தொடர்பாக, தர்மபுரி மக்களுக்கு காவேரி நீர் விடுவது தொடர்பாக என பல விஷயங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் உதயநிதி துணை முதல்வராவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றுவிட்டார். இந்த விவாகரத்தில் பல்வேறு அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications