Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த "பென்டிரைவ்" எங்கே? வெறும் 30 சீட்டா? கிளம்பி வர்றாரு எடப்பாடி பழனிசாமி.. கிலியில் "தலை"கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி இன்னும் இறுதியாகாவிட்டாலும் பிரம்மாண்டமாய் காணப்படுகிறது.. அதிமுகவிலோ அப்படி எந்த அறிகுறியும் இல்லை.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்து வரும் பணிகள் துரிதமாகி உள்ளன.

பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்த நிலையில், நிறைய மாறுதல்கள் அதிமுகவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், எதுவுமே பெரிதாக நடக்கவில்லை. பாஜகவை கழட்டிவிட்டதால், வேறு கட்சிகள் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவுமே பெரிதாக நடக்கவில்லை.

Can Edappadi Palaniswami form a mega alliance and What are the Major Assignment to AIADMK District Secretaries

சமாதானம்: தென்மாநிலங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருப்பதால், தமிழகத்திலும் முனைப்பு காட்டி வருகிறது. அதனால், எடப்பாடி பழனிசாமியை எப்படியும் சமாதானப்படுத்தி கூட்டணி வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதுவுமே நடக்கவில்லை.

திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்ததன் மூலம், கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கூட்டணி முறிவு: கூட்டணியை முறித்தன்பால், எந்தவிதமான பலன்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கவில்லை என்றாலும், மிச்சசொச்சமாய் விசிகவை மட்டுமே தற்போதைக்கு நம்பிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அத்துடன், சிறு சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு, மிச்சமுள்ள 30 தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டு வருகிறாராம்.

அதுமட்டுமல்ல, இந்தமுறை கூட்டணி பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக கவனிக்கிறாராம்.. அதனால்தான், கீழ்மட்டத்தில் நிர்வாகிகளை முடுக்கிவிடவும் திட்டமிட்டிருக்கிறார்.. இதற்காகவே வருகிற 9-ந்தேதி அதாவது செவ்வாய்க்கிழமையன்று, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்..

பொறுப்பாளர்கள்: பூத் கமிட்டிகளை அமைத்து, அதை மேற்பார்வையிட்டு தகவல்கள் அடங்கிய பென்டிரைவை, வழங்க வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கும், பூத் கமிட்டி பட்டியலை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே, எடப்பாடி பழனிசாமியிடம் லிஸ்ட்டை ஒப்படைத்திருந்தனர்.. இருந்தாலும், வெறும் 60 சதவீதம் மட்டுமே தந்திருக்கிறார்களாம்.. இன்னும் 40 சதவீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டியிருக்கிறது.

திடீரென மழை வெள்ள பாதிப்பால் அந்த பணிகள் அப்படியே முடங்கவிட்டது. எனினும், இது சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஜரூர் பணிகள்: ஒருவேளை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பூத் கமிட்டி வேலையை முடிக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி தயங்க மாட்டாராம். ஆக, கூட்டணி விவகாரம் ஒருபக்கம், பூத் கமிட்டி வேலைகள் மறுபக்கம் என அதிமுகவே பரபரப்பாக காணப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+