5 சீட்?.. யாரு பாஜகவா?.. இலையில் சோறு போட்டு.. என்னை போயி எடப்பாடி பழனிசாமி?.. அன்வர் ராஜா ஆவேசம்
அதிமுக மூத்த தலைவர் அன்வர்ராஜா, திமுக பாஜகவை விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர் ராஜா தன்னுடைய கருத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் விவாதத்தை உண்டுபண்ணி வருகிறது.
அதிமுக வழக்கு குறித்த, பரபரப்பான வாதங்கள் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.
ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 2 பேரும், சமாதானம் ஆகாமல் போனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதுதான், இப்போதுவரை சஸ்பென்ஸாக உள்ளது.. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் அன்வர்ராஜா ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் தன்னுடைய மனக்குமுறல்களையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

5 சீட்டுக்கள்
"கடந்த தேர்தலின்போது, கூட்டணி பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமியை நான் நிறையவே பாராட்டினேன்.. காரணம், பாஜகவை 5 சீட்டுக்குள்ளேயே அடக்கிட்டாரு.. பாமக உட்பட கூட்டணி கட்சிகளை அப்படி அப்படியே உட்கார வைத்துவிட்டு, அதிமுக மிகப்பெரிய கட்சி என்பதை நிலைநாட்டினார்.. சிவி சண்முகத்துக்கு கூட்டணி விஷயத்தில் மாறுபட்ட கருத்து இருக்கலாம்.. அதிமுக - பாஜகவுக்கான கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கலாமே தவிர, பாஜக - திமுக கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது..

மாயத்தோற்றம்
பாஜக என்பது ஒரு மாயத்தோற்றம்.. தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால், நான் ஒத்துக்க மாட்டேன்..
தமிழ் என்கிற ஒற்றை பிம்பத்தில் உள்ளே நுழைந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது.. தமிழ்ச்சங்கத்தை காசியில் நடத்தி உள்ளே வந்துடலாம்னு பார்க்கறாங்க.. தமிழ் மக்களை அவ்வளவு ஈஸியாக ஏமாற்றிவிட முடியாது.. தமிழ் மக்களுக்கு என்ன செய்யணுமோ அதை பாஜக செய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக கேட்கிறோமே, 8 வருஷமாக பாஜக அதை செய்யவே இல்லையே..

அடையாளம்
கேந்திர வித்யாலய பள்ளிகளிலும் தமிழ் இல்லை.. சென்ட்ரல் ஸ்கூலிலும் தமிழ் இல்லை.. ஜவஹர்லால் நேரு யூனிவர்சிட்டியில் 8 வருஷமாகவே தமிழ் பேராசிரியர்களை நியமிக்கவில்லை.. இப்படி தமிழுக்கு எதிராக எல்லா காரியத்தையும் செய்துவிட்டு, தமிழ் சங்கமம் என்று காசியில் நடத்தினால், தமிழர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? பாஜக தமிழகத்தில் வரவேண்டும் என்றால்கூட, சாதி வித்தியாசம் இல்லாத ஒரு கட்சியாக தன்னைகாட்டிக் கொள்ள வேண்டும்.. பிராமணிய அடையாளத்தை தூக்கி தூரவீசிவிட்டு, எல்லாருக்கும் பொதுவான கட்சி என்ற அடையாளத்துடன், வந்தால்தான், தமிழகத்திலேயே நுழையவே முடியும்

சோற்றில் இலை
சனாதனத்தையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால் எப்படி? ஆளுநர் ரவி ஒருத்தர் போதுமே.. அண்ணாமலையை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் கண்ணதாசன் வரிகளே போதுமானது.. "விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது" இதை மட்டும் சொல்லலாம்.. வெறும் விளம்பரத்தினால் மட்டுமே அண்ணாமலையால் கட்சி நடத்த முடியாது என்பதால்தான் உறுதியாக சொல்கிறேன், தமிழகத்தில் பாஜக நுழையவே முடியாது என்று.

இலையில் சோறு
பாஜகவின் சனாதன பார்வையே வேறு.. நம்முடைய பார்வை என்பது வேறு.. வேறுபாடுக்கும், மாறுபாடுக்கும் வித்தியாசம் உள்ளது.. வேறுபாடு என்றால், ஒரு இலையில் சோறுபோட்டு, கூட்டு அப்பளம், உட்பட வேறுபட்ட உணவுகளை வைப்பது.. இதுதான் நம்முடைய கட்சிகள்.. மாறுபாடு என்றால், ஒரு இலையில், சோற்றை வைத்துவிட்டு, பக்கத்திலேயே மலத்தை வைப்பது.. இதுதான் பாஜக.. நம்முடைய தமிழக மக்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலைதான் உள்ளார்கள்.. அதனால் அதிமுகவை பொறுத்தவரை, 2014-ல் அம்மா எடுத்த நிலைமையையே இப்போதும் எடுக்க வேண்டும்.. திமுகவையும் எதிர்க்கணும், பாஜகவையும் எதிர்க்கணும்..

துரும்பளவு
கூட்டணியில் நிற்பதைவிட தனியாக போட்டியிடுவதே நல்லது என்று நினைக்கிறேன்.. அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பவும் கூட்டணி அமைய வேண்டும்.. விரும்பாத கூட்டணியை அமைத்துதானே, ஏற்கனவே தோற்று போனோம்.. எடப்பாடி தரப்பில் பாஜக வேண்டாம் என்ற குரல்களை நான் வரவேற்கிறேன்.. ஆனால், தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும், அதேசமயம் எல்லாரும் ஒன்று சேர்ந்து, இரட்டை இலையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும்.. தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால், புரட்சி தலைவர், அம்மாவின் குணத்தில் ஒரு துரும்பளவுகூட எடப்பாடியிடம் இல்லையே.. இதுதான் என் வருத்தம்..

பெட்டிஷன்
எம்ஜிஆருக்கு எதிராக கட்சியை ஆரம்பித்து, அதிமுகவையே ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சவால்விட்டு, எம்ஜிஆர் மீதே பெட்டிஷன் தந்த எஸ்டிஎஸ்ஸையே கட்சிக்குள் சேர்த்துக்கிட்டார் எம்ஜிஆர்.. அதிமுக என்ற கட்சிக்குள்ளேயே ஜெயலலிதா வரக்கூடாது என்று நினைத்த ஆர்எம் வீரப்பன், காளிமுத்துவையே அம்மா சேர்த்துக்கிட்டாங்க.. எல்லாரையும் அரவணைத்து கட்சி நடத்தினால்தான், அது எல்லாருக்குமான கட்சியாக இருக்கும் என்று அந்த தலைவர்கள் நினைத்தார்கள்.. ஆனால், எடப்பாடி ஏன் அதை நினைக்க மறுக்கிறார்..

துண்டு ஏந்தி
1972-ல் கட்சியில் இருந்தவர்களில் இப்போது யார் இருக்கிறார்கள்? 1972 முதல் 1977 வரை அதிமுகவில் யார் இருந்தார்களோ, அவர்கள்தான் உண்மையான அதிமுக தொண்டர்கள்.. நான் எப்படி இந்த கட்சியை அப்போது வளர்த்தேன் தெரியுமா? "இந்த கூட்டத்தின் செலவை ஈடுகட்டுவதற்காக, நகைக்கடை செயலாளர் பூமிநாதன் அவர்களும், துணை செயலாளர் அகமது அவர்களும் இப்போது துண்டு ஏந்தி வருவார்கள், உங்களால் முடிந்த காணிக்கையை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று நான் மேடையிலேயே அறிவிப்பேன்.. உடனே இவங்க 2 பேரும் துண்டை ஏந்திக்கொண்டு அங்கிருக்கும் மக்களிடம் செல்வார்கள்..

75 ரூபாய் 50 காசு
மக்களும், கையில் இருக்கும் 50 பைசா, 20 பைசா 1 ரூபாயை துண்டில் போடுவார்கள்.. அந்த பணத்தை மேடையிலேயே வைத்து எண்ணி, "துண்டு ஏந்தி வந்ததின் விளைவாக, மொத்தம் 75 ரூபாய் 50 காசு வசூல் ஆகி உள்ளது, இதை நகர செயலாளரிடம் ஒப்படைக்கிறேன்" என்று சொல்லி பொதுமக்கள் முன்பேயே பணத்தை ஒப்படைப்பேன்.. இப்படியெல்லாம் கூட்டம் நடத்தி கட்சியை நான் வளர்த்தேன்.. அந்த சமயத்தில் 13 முறை, நான் ஜெயிலுக்கு போயிருக்கேன்.. புரட்சித்தலைவரின் அன்பை முழுமையாக பெற்றிருக்கேன்.. அவரை வைத்துக் கொண்டே 3 மாநாட்டில் பேசியிருக்கிறேன்.. இப்படி பாரம்பரியம் மிக்க, என்னை போயி கட்சியில் இருந்து நீக்கினால் எப்படி?" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார் அன்வர்ராஜா.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications