பாரிவேந்தருக்கு குஷி.. பாஜக தந்த "பெரிய லட்டு".. உதயசூரியன் டூ தாமரை
சென்னை: பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ள ஐஜேகே பாரிவேந்தருக்கு, அவர் ஆசைப்பட்ட தொகுதியே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.. இதை திமுக தரப்பும் உற்று கவனித்து வருகிறது!
எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. எப்போதும் இல்லாதவாறு இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. அதுவும் மெகா கூட்டணியை வைத்து.

கூட்டணி: ஓபிஎஸ் + தினகரன் + ஏசி சண்முகம் + ஜி கே வாசன் + சரத்குமார் + ஜான்பாண்டியன் + தேவநாதன் யாதவ், என கிட்டத்தட்ட பெரிய கூட்டணியையே குறுகிய காலத்தில் தயார் செய்துவிட்டது.. இந்த கூட்டணி விஷயத்தில், அதிமுகவைவிட ஒரு படி, தமிழக பாஜக வேகம் எடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால், பாஜகவின் இப்படி ஒரு கூட்டணிக்கு, முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டதே பாரிவேந்தர்தான்.. கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டவர்தான் பாரிவேந்தர்.. தேர்தலில் போட்டியிட்டு வென்றதோடு சரி, அதற்கு பிறகு திமுக நிகழ்வுகளில் அவரை பார்க்கவே முடியவில்லை.
அண்ணாமலை: 2 வருடங்களுக்கு முன்பேயே பாஜகவுக்கான ஆதரவை தந்துவிட்டார் பாரிவேந்தர்.. அதாவது, உதயசூரியன் சின்னத்தில் இருந்துக்கொண்டே, திமுகவையும் கடுமையாக விமர்சித்தது பாரிவேந்தராகத்தான் இருக்க முடியும். ஒருகட்டத்தில், பாஜகவை ஆதரிப்பதாக வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. அண்ணாமலை போல ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கு அவசியம் என்றார்.. உலக நாடுகளிலேயே இந்தியாவுக்கு ஒரு மரியாதை கிடைக்கிறதென்றால், அதற்கு காரணமே மோடிஜிதான் என்றார்.
இதையடுத்து, பாஜகவுடன் ஐஜேகே நிச்சயம் கூட்டணி வைக்கும் என்றே கூறப்பட்டன் அத்துடன், பெரம்பலூர் தொகுதியை ஐஜேகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிடம் 2 வருடம் முன்பே துண்டை போட்டுவிட்டதாக செய்திகள் கசிந்தன. அதுமட்டுமல்ல, தன்னால் இந்த முறை போட்டியிட முடியாததால், மகன் ரவி பச்சமுத்துவை களமிறக்க போவதாகவும் சலசலக்கப்பட்டது.
பெரம்பலூர்: இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக கூட்டணி முடிவாகி உள்ளது.. அதில், கூட்டணியை மீண்டும் உறுதி செய்தார் பாரிவேந்தர். மேலும், பெரம்பலூர் அல்லாமல் வேறு 2 தொகுதிகளில் போட்டியிடவும் ஐஜேகே விருப்பம் தெரிவித்து, கள்ளக்குறிச்சி, தென்சென்னை தொகுதிகளையும் பாஜகவிடம் கேட்டு வந்தார் பாரிவேந்தர். அதுமட்டுமல்ல, இந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்துவிட்டார்.
ஆனால், பாஜக ஒரே ஒரு தொகுதியை அதுவும், பாரிவேந்தர் ஆரம்பத்திலிருந்தே கேட்ட பெரம்பலூர் தொகுதியை மட்டுமே தற்போது ஒதுக்கியிருக்கிறது.. இந்த பெரம்பலூர் தொகுதியில்தர்ன, திமுக வேட்பாளரான அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.
நேரு மகன்: பெரம்பலூரை பொறுத்தவரை பலம்வாய்ந்த நேருவின் மகன் போட்டியிட்டாலும், பாரிவேந்தர் பெருத்த நம்பிக்கையில் உள்ளார்.. இதற்கு காரணம், தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை பெரம்பலூரில் பாரிவேந்தர் செய்து கொண்டேயிருந்ததுதான்.. தான் செய்த நலத்திட்டங்கள் தன்னை வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாரிவேந்தர்.
இந்த முறை பாஜகவுடன் பாரிவேந்தர் கூட்டணி வைக்க சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.. அதாவது, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு..
மகிழ்ச்சி: எப்படியோ, கடந்த 2 வருடமாக ஆசைப்பட்டு கேட்டுக் கொண்ட தொகுதியை பாஜக தற்போது ஒதுக்கி உள்ளது. தான் செய்த நலத்திட்டங்களும், உதவிகளும், தன்னை வெற்றி பெற வைக்கும் என்ற அதீத நம்பிக்கையில், உதயசூரியனிலிருந்து தாமரைக்கு தாவியுள்ளார் ஐஜேகே பாரிவேந்தர்..!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications