"ஆடு பகை குட்டி உறவு".. 15 வயசு பிஞ்சு.. நாஞ்சில் முருகேசன் ஞாபகம் இருக்கா.. "துண்டு" போட்டாச்சு போல
நாகர்கோவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு நாஞ்சில் முருகேசன் அடிபோடுகிறாராம்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பஞ்சாயத்து இன்னும் தீராத நிலையில், மாவட்டங்களில் சிக்கல்கள் பெருகி வருகிறது.. அதில் ஒன்றுதான் நாகர்கோவில் தொகுதி..!
அதிமுக தலைவர்கள் 2 பேரும் இப்போதைக்கு ஒன்று சேர்வார்களா என்று தெரியாது.. ஆனால், பாஜக இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகளை மறைமுகமாக மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
எனினும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் இன்னும் குறையவில்லை.. எனவே ஓபிஎஸ் ஒருபக்கம், எடப்பாடி ஒருபக்கம் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள்.

பூசல்கள்
இதனால் யாரை நம்புவது? யார் தங்கள் தலைவர்? அதிமுக யாரிடம் தான் உள்ளது? என்ற குழப்பங்களில் ரத்தத்தின் ரத்தங்கள் தவித்து கொண்டுள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் நாகர்கோவிலில் பூசல் கிளம்பி உள்ளதாம்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ முருகேசன் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து வருகிறது.. அதற்கு முன்னால், முருகேசன் மீதான புகார் குறித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மீடியாக்களில் வெளிவந்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்.

விண்ணை கிழித்த கதறல்
நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்தவர் அந்த 15 வயது சிறுமி.. அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர். அப்போது, என் அம்மாவுடன் என்னை அனுப்ப வேண்டாம் என்று சிறுமி கதறி அழுதாராம்.. காரணம், 4 வருஷத்துக்கு முன்பு அதாவது 2017-ல், பெற்ற மகளை முருகேசனிடம் கூட்டிக் கொண்டு போனாராம் பெற்ற தாய்..

15 வயசு பிஞ்சு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 2 வருஷமாக தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்திருந்தார். இதையடுத்து எஸ்கேப் ஆகி, ஒரு தோட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த முருகேசனை 5 தனிப்படைகள் வைத்து தேடி, இறுதியில் கைதும் செய்தனர். தான் நாசமாக போனதுடன், இல்லாமல் பெற்ற மகளையும் பணத்துக்காக கொண்டு வந்து 60 வயது நபரிடம் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார் அந்த தாய்.. பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள்.. அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

வாக்குமூலம்
இவ்வளவும் சிறுமி வாக்குமூலமாக தந்தார். இதன்பிறகுதான் முருகேசனை கட்சியில் இருந்தே தூக்கியது தலைமை.. இது தொடர்பாக நாஞ்சில் முருகேசன் மறுப்பு சொன்னார்.. ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு போனார் என்றாலும், ஒருவேளை போக்சோ பாய்ந்துவிட்டால், அது கட்சிக்கே அசிங்கம் என்பதால்தான் முருகேசனை அதிமுக தலைமை கட்சியில் இருந்து தூக்கியதாக சொல்லப்பட்டது.. ஜாமீனில் முருகேசன் வெளியில் வந்துவிட்டாலும், இன்னுமும் அந்த கேஸ் விசாரணையில்தான் இருக்கிறது..

POINT 1
இப்போது கட்சிக்குள்ளும் முருகேசனால் செல்ல முடியாமல் போனது.. அதனால்தான் தன்னுடைய மகள் ஸ்ரீலிஜாவை தனக்கு பதிலாக அதிமுகவில் முன்னிலைப்படுத்தினார். இது அப்போதே குமரி அதிமுகவில் சலசலப்பை உண்டு பண்ணியது.. முருகேசனை நீக்கிவிட்டு, மகளுக்கு ஆதரவு தருவது சரியாடு என்றும் சிலர் நொந்து போய் கேட்டனர்.. ஆனாலும், நாகர்கோவில் மேயர் வேட்பாளராக முருகேசன் மகளை நிறுத்தியது அதிமுக.. இப்போது விஷயம் என்னவென்றால், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு முருகேசன் ஸ்கெட்ச் போட்டு வருகிறாராம்..

POINT 2
காரணம், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டதால், எடப்பாடி டீமில் அந்த இடம் இப்போது காலியாக இருப்பதாக தெரிகிறது.. அதற்குதான் துண்டு போட்டு வருகிறார்.. இருந்தாலும், போக்சோ வழக்கில் உள்ளவருக்கு மா.செ. பதவி தருவார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.. ஒருவேளை அப்படி தந்தால், அது கட்சிக்குள் பெரிதும் விவாதத்தை கிளப்பக்கூடும் என்கிறார்கள்.. அந்தவகையில், குமரி அதிமுகவில் சலசலப்பும், பரபரப்பும் மேலும் தொற்றிக் கொண்டுள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications