"ஊசலாட்டம்".. பன்னீரு காதில் மோடி சொன்ன "அந்த" வார்த்தை.. யாரந்த அமைச்சர்? தினகரன் எடுத்த புது ரூட்
சென்னை: எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவில்லை.. எனினும் பன்னீர்செல்வத்தின் அரசியல் வேகம் எடுத்துள்ளதாம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போவதாக செய்திகள் வெளியானது.. அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க போவதாகவும் சொன்னார்கள்..
இரு தரப்புக்குமே பிரதமர் மோடி அப்பாயிண்மென்ட் தந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகவும், பரபரப்பு எகிறியது.. இரு தரப்பிலும் நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியை பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வரவேற்க போவதாகவும், அப்போது இரு தரப்புமே பேச உள்ளதாகவும் கூறப்பட்டது..

எடப்பாடி: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து பேச மொத்தம் 15 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு வெறும் 10 நிமிஷம்தான் பிரதமரை சந்திக்க டைம் தந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், எந்தவிதமான சந்திப்பும் நடக்கவில்லை.. சென்னை வந்த பிரதமரை, ஆளுநர், முதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனரே தவிர, இருவரிடமும் பிரதமர் மோடி பேசவில்லை..
அப்பாயிண்மென்ட்: இவர்களில், தனியாக யாரை சந்தித்து பேசினாலும் அது தேவையில்லாத நெருடலை தந்துவிடும்.. இதில், எடப்பாடியை தனியாக சந்தித்து பேசினாலும் அது பிரச்சனை ஆகிவிடும்.. ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனை.. கவர்னரை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனைதான்.. அண்ணாமலையையும் தனியாக சந்தித்தாலும் பிரச்சனை.. அதனால், மொத்த பேரையும் ஒன்றாக சந்தித்துவிட்டு, கிளம்பவே பிரதமர் மோடி நினைப்பாரே தவிர, தனித்தனியாக பேச வாய்ப்பே கிடையாது என்று அரசியல் விமர்சகர்களும் இதை பற்றி கருத்து சொன்னார்கள். ஆனால், எடப்பாடியுடன் எதற்காக இந்த சந்திப்பு நடக்கவில்லை என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில், ஓபிஎஸ் தரப்பிலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.. அதாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றதுபோலவே, ஓபிஎஸ்ஸும் வரவேற்றிருக்கிறார்.. பிரத்யேகமாக சந்தித்துபேசவில்லை என்றாலும், ஓபிஎஸ் வரவேற்றபோது, அவரிடம் "டோன்ட் ஒர்ரி" என்று மட்டும் மோடி சொன்னாராம்.. இந்த ஒற்றை வார்த்தையே தங்களுக்கு மிகப்பெரிய பலம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறது ஓபிஎஸ் டீம்.. அதுமட்டுமல்ல, சில சிக்னல்கள் மேலிடத்தில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்துள்ளதாம்.. யாதவ பிரிவை சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் ஒருவரை, ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான முன்னாள் எம்பி ஒருவரை சந்தித்து பேசினாராம்..
டோன்ட் ஒர்ரி : அப்போது பாஜக அமைச்சர், "நிறைய பேரணிகளை நடத்துங்கள், மாநாடுகளை நடத்துங்கள், கூட்டங்களை கூட்டுங்கள், இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து கொண்டே இருங்கள், பாஜக உங்களை ஒருபோதும் கைவிடாது" என்றாராம். இதையடுத்து, திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய முடியும் என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளாராம்..
இப்போதைக்கு திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதிலேயே முழு கவனத்தை திருப்பி வருவதாக தெரிகிறது.. பிரிந்துபோனவர்களுக்கும் ஓபிஎஸ் அழைக்க நினைக்கிறாராம்.. குறிப்பாக, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, அன்வர்ராஜா, சசிகலா, உள்ளிட்டோரை அழைக்கும் விதமாகவும் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறாராம்.. ஆனால், சசிகலா இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகம்தானாம்.. ஓபிஎஸ்ஸுடன் சேருவதாக இருந்தால் எப்போதோ அவருடனான சந்திப்பை சசிகலா நடத்தியிருக்கக்கூடும்..

சசிகலா : ஓபிஎஸ் ஏப்போதுமே தன் தரப்பு ஆதரவாளர்தான் என்பதை சசிகலா அறியாமல் இல்லை.. எனவே, எடப்பாடியை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பதில்தான் திணறி வருவதால், ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா பங்கேற்க சாத்தியமில்லை என்கிறார்கள். அதுபோலவே ஓபிஎஸ் மாநாட்டில் தினகரனும் பங்கேற்க மாட்டார் என்கிறார்கள். காரணம், ஓபிஎஸ் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டால், "சாதி முத்திரை" குத்தப்பட்டுவிடும் என்பதால், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம்.. ஆக, ஓபிஎஸ் இந்த மாநாட்டை எப்படி நடத்தி முடிக்க போகிறார்? என்பது மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி உள்ளது.
மக்கள் மன்றத்தை நாடுவோம், மக்களை சந்திக்க போகிறோம் என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சொல்லி வரும் நிலையில், அதே வியூகத்தைதான் மேலிட பாஜகவும் வலியுறுத்தி வருவது கவனிக்கத்த விஷயமாகும்.. கர்நாடக தேர்தல் முடிந்தபிறகுதான், அதிமுக விவகாரம் குறித்து பாஜகவும் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications