தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு எதிரான மனு.. உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை, தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி, தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த முடிவை எடுத்தது. அதன்படி 58ஆக இருந்த ஓய்வு பெறும் வயது 60 என்று உயர்த்தப்பட்டது.

நிதிப் பற்றாக்குறை
அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்திருந்த நிலையில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு நிதி தேவைப்படும் என்பதால் ஓய்வு பெறும் வயதை தள்ளிப்போடுவது நிதிப் பிரச்சனையில் தற்காலிக தீர்வாக அமையும் என்று நினைத்து அப்போதைய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

புதிய வேலை வாய்ப்பு
அதேநேரம், புதிதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது என்பதால் ஒரு தரப்பில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் குறைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதும் நிதிப் பிரச்சினை இருப்பதால் அந்த முடிவு என்னும் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி அதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதங்கள்
அப்போது மனுதாரர் தரப்பில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால், அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரருக்கு அபராதம்
இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்கு தொடர மனுதாருக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அரசு ஊழியர்களுக்கு பெரிய ட்விஸ்ட்.. இடமாற்றம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு












Click it and Unblock the Notifications