முதல் வேலையே சரவெடி.. சைஸா சொன்ன பாஜக.. படக்குன இறங்கின "தலை".. எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்க்கல
சென்னை: விருதுநகர் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியதுதான், இப்போது தமிழக அரசியல் களத்தில் அனலாய் தகித்து கொண்டிருக்கிறது.. எல்லாத்துக்கும் காரணம் பாஜகதான் என்றும் சொல்கிறார்கள்.. என்னதான் நடக்கிறது?
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் பேசும்போது, "சாதாரண தொண்டர், பொதுச்செயலாளராக ஆக முடியாது.. வேலுமணி, தங்கமணி, வீரமணி போன்று பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் தான் வர முடியும். எடப்பாடியே... கட்சிக்காக என்ன தியாகம் செய்திருக்கிறாய்? நீயாக ராஜினாமா செய்து விடு.

இல்லையென்றால் தொண்டர்கள் ஒன்றுகூடி ஓட, ஓட விரட்டும் காலம் கனிந்து வருகிறது. நாலரை வருடம் நீ பதவியில் நீடிக்க முழு முதற் காரணம் மோடி. அதை மறந்து கூட்டணி இல்லையென்று சொல்கிறாய். அனைவரும் சேர வேண்டும் என தலைவர்கள் சொல்வார்கள்.. ஆனால், உலகத்திலேயே பிரிந்தே இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரே நபர் நீதான்.. எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. பஞ்சாயத்து தேர்தலில் கூட நீ வெற்றி பெற முடியாது.." என்று பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.
பாஜக: எப்போதுமே காரசாரமாகவும், காட்டமாகவும் விமர்சனங்களை முன்வைக்காத ஓபிஎஸ், தற்போது கொதித்து பேசியிருக்கிறார்.. அதுவும் கடுமையாக எடப்பாடி பழனிசாமியை சாடியிருந்தார்.. இதற்கெல்லாம் பின்னணி காரணம், பாஜகதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எப்போதுமே பாஜகவின் ஆதரவாளராகவும், பாஜகவின் நன்மதிப்பை பெற்றவராகவும் செயல்பட்டு வரக்கூடியவர் ஓபிஎஸ். அப்படியிருந்தும்கூட, சமீபகாலமாகவே, மேலிட பாஜக இவரை கண்டுகொள்ளவில்லை.. ஈரோடு இடைத்தேர்தலின்போது கூட, பாஜகவுக்காக ஓபிஎஸ் விட்டுக்கொடுத்ததை தமிழகமே பார்த்து அதிர்ந்தது..
எடப்பாடி பழனிசாமி: ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஈரோடு வேட்பாளரே, இதைப்பார்த்து கடுப்பாகி, எடப்பாடி பக்கம் போய்விட்டார். ஆனாலும், பாஜக தரப்பில் ஓபிஎஸ்ஸுக்கான முக்கியத்துவத்தை தராமலேயே இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், பிரதமர் மோடி சமீபத்தில் திருச்சி வந்தபோது, அவரை சந்தித்து பேச ஓபிஎஸ்ஸுக்கு அப்பாயின்மென்ட் தரப்பட்டது.. அதுமட்டுமல்ல, பாஜக - ஓபிஎஸ் தரப்பில், கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய அசைன்மென்ட் ஒன்று தரப்பட்டுள்ளது.
வாசன்: அதாவது, கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்டும்கூட, அதிமுகவுடன் யாருமே இன்னும் கூட்டணி அறிவிக்கவில்லை.. டாக்டர் ராமதாஸ், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், உள்ளிட்டவர்கள் அமைதி காத்து வருகிறார்கள். அதேசமயம் பாஜக பக்கமும் அவர்கள் சாயவில்லை. பாஜக - அதிமுக இணையலாம் என்பதால், பொறுமை காப்பதாக தெரிகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை பார்த்தால், பாஜக தனித்தே களமிறங்க வாய்ப்புள்ளாக சொல்கிறார்கள். ஏ.சி. சண்முகமும், பாரிவேந்தரும் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவை தந்துள்ள நிலையில், மற்றவர்கள் அமைதி காத்து வருகிறார்கள்.
அசைன்மென்ட்: அதனால்தான், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணியை வலுப்படுத்துவதற்கான அசைன்மென்ட்டை ஓபிஎஸஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம். மேற்கண்ட தலைவர்களை பாஜகவுக்குள் ஓபிஎஸ் கொண்டுவருவாரா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை தரப்போகிறார்களா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications