Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18% + 5.. கமலாலயத்தில் "புயல்..ங்க".. அசராத எடப்பாடி பழனிசாமி.. திமிறியெழும் லீடர்.. அதென்ன 3வது டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில், மேலிட பாஜக கறாராக உள்ள நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல் உள்ளார்.. அப்படியானால், தமிழகத்தில் 3வது அணி உருவாக போகிறதா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
கடந்த முறை சட்டமன்ற தேர்தலின்போது, "உங்கள் கூட்டணிக்கு தலைமை யார்" என்று எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு எடப்பாடி, 'தேர்தல் நெருங்கும்போதுதான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்' என்று கூறியிருந்தார்..

அதேபோல், முதல்வர் வேட்பாளர் என்று, பாஜக தரப்பிலும் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு, "பாஜக மேலிடம் தான் அதை பற்றி முடிவு செய்யும்" என்று அப்போதைய மாநில தலைவர் எல்.முருகன் முதல் வானதி சீனிவாசன் வரை பதிலளித்திருந்தனர்..

முருகன்

முருகன்

பொதுவாக மக்களவை தேர்தலின்போதுதான், மேலிட பாஜக, கூட்டணி தலைமை, சீட் விவகாரங்களில் முடிவு செய்வது வழக்கம் என்றாலும், இங்கே நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தன் கன்ட்ரோலிலேயே கூட்டணியை வைத்திருக்க நினைத்ததை எடப்பாடி பழனிசாமி தரப்பு அப்போதே விரும்பவில்லை என்கிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி யோசித்திருந்தாராம்.. இதற்கு காரணம், அப்போதுதான், குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி மக்கள் மனதில் குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை படர்ந்திருந்தது..

 டமார் கூட்டணி

டமார் கூட்டணி

கடந்த 4 வருட காலமாகவே பாஜக கூட்டணியை விரும்பாமல், மென்று விழுங்கி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போது ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்கும் மனநிலைமைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.. அதனால்தான், "கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம்" என்று எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.. இது தமிழக பாஜகவுக்கு அதிர்ச்சியையே தந்தது.. இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள் அப்போதே கருத்து கேட்டனர்.. "எடப்பாடி பேட்டியில் என்ன சொன்னார்"? என்று 2 முறை திரும்ப திரும்ப செய்தியாளர்களை கேட்டார் அண்ணாமலை..

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

கூட்டணி குறித்து 2024-ல் நாங்கள் முடிவு செய்வோம் என எடப்பாடி சொல்கிறார் என்று சொன்னதுமே, சிறிது நேரம் யோசித்துதான் அண்ணாமலை அதற்கு ரியாக்ட் செய்தார்.. "விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்" என்று பட்டென பதிலளித்தார்.. இந்த பேட்டிதான், அண்ணாமலையின் கூட்டணி வியூகத்துக்கு முதல் புள்ளியை வைத்தது என்கிறார்கள்.. இணக்கமான நெருக்கத்தில் எடப்பாடியும், அண்ணாமலையும் பயணித்த நிலையில், திடீரென "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை அண்ணாமலை கையில் எடுத்ததை எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லையாம். தற்போது, அதிமுக அல்லாத கூட்டணி என்ற தன் விருப்பத்தை, கட்சிக்குள்ளேயே போட்டு உடைத்துள்ளார்..

பிடிவாதம்

பிடிவாதம்

காரணம், ஒருசில கணக்குகளையும் அண்ணாமலை கையில் வைத்திருக்கிறாராம்.. தன் மீதான அசாத்திய திறமையை அண்ணாமலை நம்புவதால்தான், கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு தன்னை ஒரு தனிப்பெரும் ஆளுமையாக கருதுகிறார்... அதனால்தான், பாஜக தலைமையிலான கூட்டணி என்ற விஷயத்தில் அண்ணாமலை பிடிவாதமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், தன்னுடைய தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பதே அண்ணாமலையின் விருப்பமாக உள்ளதாம்.. அதன்படி, தங்களுக்கு இணக்கமாக உள்ள கட்சிகளை வைத்து 3வதுஅணியை கட்டமைக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம்..

 3வது அணி

3வது அணி

அதாவது, கடந்த 2014 எம்பி தேர்தலில் திமுக, அதிமுக தவிர 3-வது அணியாக பாஜக கூட்டணி களமிறங்கியது.. அப்போது வெறும் 7 தொகுதிகளை மட்டும் வைத்துக்கொண்ட பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மற்ற தொகுதிகளை பிரித்து தந்தது.. இதில், சேலத்தில் அன்புமணியும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், பாஜக அணி 18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது... இந்த 18 சதவீத வாக்குகள் இப்போது கிடைத்தாலும் போதும் என்றே அண்ணாமலை தரப்பு நினைக்கிறதாம்..

 5 சீட்

5 சீட்

எப்படியும் 5 சீட்டை பிடித்துவிடலாம் என்று நம்புகிறதாம்.. அதுமட்டுமல்ல, இதே கூட்டணி நீடித்தால், 2026 தேர்தலும், அதிமுகவை விட அதிகமாக ஓட்டு வாங்கி விடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையும் உள்ளதாம். இதை மனதில் வைத்தே "அதிமுகவுடன் கூட்டணி கிடையாது, தனித்துப் போட்டி" என்று அண்ணாமலை பேசியதாக சொல்கிறார்கள். ஆனால், அதற்கு போதுமான ஆதரவு ரியாக்‌ஷன் கட்சிக்குள்ளிருந்தும், மேலிடத்திலிருந்தும் கிடைக்கவில்லை.. இதற்கு பிறகே, "தனக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை" என்று தன்னிலை விளக்கம் தந்தாராம் அண்ணாமலை.

 கரு நாகராஜன்

கரு நாகராஜன்

எனினும், அண்ணாமலையின் கருத்துக்களுக்கு கட்சிக்குள்ளேயே பெருத்த ஆதரவும் இருக்கத்தான் செய்கிறதாம்.. "தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு ஆதரவு" என்ற நிலைப்பாட்டில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். அதேபோல, "அண்ணாமலையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்" என்ற நிலைப்பாட்டில் கரு.நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டவர்கள் நிற்கிறார்கள்... இதனிடையே, "அண்ணாமலை பேசியது சரிதான்" என்று சிடி ரவியும் வலுவான ஆதரவுக்கரத்தை நீட்டி உள்ளார்.. ஆக, 2 விதமான டீம்கள் பாஜகவுக்குள் உள்ள நிலையில், மேலிட பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அதுமட்டுமல்ல, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை சில விஷயங்களை தன் தரப்பில் இருந்து மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தாராம்.. அதாவது, திமுகவை திமுக தீய சக்தி என்றும், திமுகவினரை பகையாளர்களாக கருதியுமே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அரசியல் செய்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இன்னொரு திமுகவாக மாறிவிட்டது அதிமுக. .. இதனால் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.. மேலும், எம்ஜிஆர்- ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவுக்கு வாக்குகளை செலுத்திய ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், முத்தரையர்கள், பிராமணர்களின் ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காத நிலை உள்ளது..

சஜஷன்

சஜஷன்

போதாக்குறைக்கு ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் போன்றோரும் பிரிந்துள்ளதால், இந்த பாதிப்பு அதிகமாகும்.. அதனால், இதையெல்லாம் கருத்தில் கொண்டே கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னாராம் அண்ணாமலை.. அதிமுக எப்படி திமுக எதிர்ப்பு அரசியலை வைத்து 30 வருடங்கள் ஆட்சி செய்ததோ, அதுபோலவே, இப்போது திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.. இந்த எதிர்ப்பு அரசியல்தான், நமக்கு வெற்றியை பெற்றுதரும் என்றும் கூறினாராம். இதையும் பாஜக பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

 கமலாலயம் ப்ளான்

கமலாலயம் ப்ளான்

ஒருங்கிணைந்த அதிமுகவையே, மேலிடமும் விரும்புவதால், அண்ணாமலையின் கருத்தை ஏற்பார்கள்? அண்ணாமலை பதவிக்கும் சிக்கல் வந்துவிடுமே? என்று சிலர் கூறிவருகிறார்கள்.. ஆனால், அண்ணாமலை காலத்தில்தான், தமிழக பாஜக தனித்துவத்துடன் வளர்ந்திருக்கிறது என்பதை மேலிட தலைவர்கள் நன்றாக உணர்ந்துள்ள நிலையில், அவரை அவ்வளவு எளிதில் பதவியைவிட்டு நீக்க முடியாது என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பாஜகவை சொந்தக் காலில் நிற்கவைக்க முடியும் என்று உறுதியாக சொல்லும் அண்ணாமலையின் நம்பிக்கையை கண்டு மேலிடமே ஆச்சரியப்பட்டுள்ளதாம்.. அண்ணாமலைக்கு கட்சிக்குள்ளேயே ஆதரவும் கிடைத்துள்ளதையும் பார்த்து மலைத்து போயுள்ளதாம்..

மலைப்பு

மலைப்பு

கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று அண்ணாமலை அறிவித்துவிட்டபோதிலும், "அண்ணாமலை அரசியல் பாதையே சரி" என்று அவரது பேச்சில் உள்ள நியாயத்தை சிடி ரவி போன்ற சீனியர்களே தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், கூட்டணி குழப்பம் நீடிப்பதாகவே தெரிகிறது.. என்னதான் செய்ய போகிறது மேலிட பாஜக? ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் உள்ளிட்டோரின் ஆதரவுகளை தக்கவைக்க, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை மேலிடம் எப்படி தளர்த்த போகிறது? அண்ணாமலை எதிர்பார்ப்பதுபோல, 3வது அணி அமைய போகிறதா? அல்லது அதிமுகவுடன் கூட்டணி தொடர் போகிறதா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+