தூங்கும்போது கூட மோடியா? எப்ப பார்த்தாலும்.. மோடி மோடி மோடி.. திடுதிப்புனு ஓடோடி வந்த பாஜக தலைவர்
சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி தியான நிகழ்ச்சியை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும்நிலையில், தமிழக பாஜக இதற்கு சரியான பதிலடியை தந்துள்ளது.
மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தில் உள்ளது.. இந்த முறை தேர்தலில் எப்படியும் 400 தொகுதிகளில் வெல்வோம் என்றும், 3வது முறையாக மோடியே பிரதமராவார் என்றும் பாஜக பெருத்த நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறது.

குட் பை மோடி: ஆனால், பாஜகவின் ஆசையில் மண்ணை அள்ளி கொட்டுவது போல, பாஜகவை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. "4ம் தேதிக்கு பிறகு குட் பை மோடி, குட் பை பாஜக" என்று ராகுல் காந்தி சொல்லியிருந்ததே, பாஜகவுக்கு எரிச்சலை தந்து வருகிறது.
இதற்குநடுவில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஒருபடி மேலே போய், தினம் தினம் பாஜகவை விமர்சித்து பேட்டி தந்து வருகிறார். அல்லது ஏதாவது ஒரு அறிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக, மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பாஜக ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலையினால் மோடி ஆட்சி வருகிற தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்தியா கூட்டணி ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்று தெரிவித்து வருகிறார்.
கன்னியாகுமரி: இதுபோதாதென்று நாளைய தினம், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ள நிலையில், இதற்கும் முட்டுக்கட்டை போட முயன்று கொண்டிருக்கிறது தமிழக காங்கிரஸ்.. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை நாட போவதாக சொல்லியிருக்கிறார் செல்வப்பெருந்தகை
அதாவது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலமாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பதால், இதற்கு தடை வேண்டும் என்று கேட்கிறார் செல்வப்பெருந்தகை.
மோடி மோடி: இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அனைத்துவிமான விமர்சனங்களுக்கும், தமிழக பாஜக பதிலளித்துள்ளது.. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "மோடி... மோடி... மோடி.... நிற்கும் போதும் மோடி.... நடக்கும் போதும் மோடி... தூங்கும் போதும் மோடி... மோடி இல்லையேல் உங்கள் அரசியலே இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications