"மேஜர்" அஸ்திரத்தை எடுத்த பாஜக.. திமுக ஏன் பயப்படுது தெரியுமா.. பாயிண்ட்டுக்கு வந்த "நாராயணன்".. ஓஹோ

திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன் என்று நாராயண் திருப்பதி ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் வளர்ந்துவிடுமோ என்று திமுக பயப்படுகிறது? அப்படியென்ன தமிழ் மீது திமுகவுக்கு கோபம் என்று தமிழக பாஜகவின் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்தது.. திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

 ஸ்பெஷல் இன்டர்வியூ

ஸ்பெஷல் இன்டர்வியூ

மேலும், திமுக அரசை கண்டித்து அக்டோபர் 27ல் பாஜக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.. இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழுக்கு அக்கட்சியின் சீனியரும், மாநில துணை தலைவருமான நாராயணன் திருப்பதி ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், பாஜகவின் இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக? என்ன கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்பது குறித்தெல்லாம் விரிவாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னதாவது:

 47000+ பேர்

47000+ பேர்

"தமிழகத்தில் இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, இல்லாத ஒரு திணிப்பை இருப்பதாக சொல்லி, மக்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது திமுக.. 47 ஆயிரம் மாணவர்கள் இந்த முறை தமிழில் தோல்வியுற்று இருக்கிறார்கள்.. ஆனால் அதை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.. கல்வித்துறையில் மிக மோசமான, சீர்கேடான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.. இதற்கு 2 உதாரணங்களை சொல்கிறேன்.. ஒன்று, கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அரசுக் கலைக்கல்லூரியில் கடந்த ஒன்றரை வருடங்களாகவே இயங்கவில்லை..

 டீச்சர்கள் எங்கே

டீச்சர்கள் எங்கே

அங்கே மருததுவக் கல்லூரி வந்துவிட்டதால், அங்கே படிக்கக்கூடிய 1500 மாணவ, மாணவிகள் சாதாரண கட்டிடத்தில் இருக்கிறார்கள்.. கழிப்பிட வசதிக்கூட அவர்களுக்கு இல்லை.. இப்படி எல்லா இடத்திலும் நம்ம தமிழ் மாணவர்களை பற்றி இவர்கள் கவலையே படுவதில்லை.. அதேமாதிரி தமிழ் கற்பிக்க போதுமான ஆசிரியர்களும் இல்லை.. இப்படி தொடர்ந்து தமிழுக்கு எதிராகத்தான் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.. நீதிக்கட்சியினர்தான் தமிழுக்கு எதிரானவர்கள்.. அதனால்தான், நீதிக்கட்சிக்கு எதிராக ராஜாஜி, தமிழ் பாதுகாப்பு மாநாடு என்ற ஒன்றை அப்போது நடத்தினார்.. இப்போது தமிழக முதல்வர் என்ன சொல்றார்? நாங்க நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்கிறார்..

கடுங்கோவம்

கடுங்கோவம்

நம்முடைய மத்திய அரசானது, எல்லா மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரி வித்யாலயா பள்ளிகள், இங்கெல்லாம் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நாம் சொல்லும்போது, இங்கே அதை எதிர்க்கிறார்கள்.. ஏன் எதிர்க்கிறார்கள்? தமிழ் மேல இவங்களுக்கு என்ன கோபம்? அதேபோல, மத்திய அரசும் மாநில அரசும், கடிதப்போக்குவரத்து போன்ற தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதையும் முடியாது என்று சொல்கிறார்கள்.. ஏன் எதிர்க்கிறார்கள்? தமிழ்மேல என்ன கோவம்?

பயந்துட்டாங்களே

பயந்துட்டாங்களே

டெல்லியில் இருந்து ஒரு கடிதம் வரவேண்டுமென்றால், அது இத்தனை காலம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் வந்து கொண்டிருந்தது.. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அலுவல் மொழியான இந்தியிலும், தமிழிலும் வரவேண்டும் என்கிறோம்.. இதற்கும் முடியாது என்கிறார்கள்.. தமிழ் வளர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.. எல்லா இடங்களிலும் தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால், அதையும் இவர்கள் எதிர்க்கிறார்கள்.. இப்படி எல்லாத்திலும் ஒருவருடமாகவே, தமிழை புறந்தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது திமுக..

 ஹிந்தி + இங்கிலீஷ்

ஹிந்தி + இங்கிலீஷ்

இதுக்கெல்லாம் என்ன காரணம்? கல்விதான் காரணம்.. ஏன் என்றால், 30 வருடங்களாகவே, திமுக நடத்துகிற, அதிலும் முதல்வர் குடும்பம் நடத்துகிற பள்ளிகளில் தமிழே கிடையாது.. அதாவது தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தை புறந்தள்ளிவிட்டு, ஆங்கிலத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்.. இவர்களின் நீட் உட்பட உள்ள போராட்டத்தை உற்று கவனித்து பார்த்தால் ஒன்று விளங்கும், "அரசு பள்ளிகள்" என்று மட்டும் இவர்கள் சொல்லி கொண்டிருப்பார்கள்.. இன்னைக்கு நீட் தேர்வைகூட தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.. இப்படி பல்வேறு விஷயங்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது.

 பிசினஸ்கள்

பிசினஸ்கள்

ஆனாலும், தமிழக அரசு, தங்களின் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.. அதனால்தான் தமிழை ஒதுக்கி கொண்டிருக்கிறர்கள்.. அதனால்தான் நாங்களும் போராட்டத்தை முன்னெடுக்க போகிறோம்... தமிழில் மாணவர்கள் எல்லாரும் படிக்கணும், தமிழில் எல்லாரும் தேர்ச்சி பெற வேண்டும், தமிழில் இருக்கக்கூடிய இலக்கண, இலக்கியங்களை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.. இதற்கு உண்மையிலேயே தமிழ் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" என்றார் நாராயணன் திருப்பதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+