அரசு பேருந்து ஓட்டுநர்களை விரட்டி விரட்டி அபராதம் போட்டீங்களே, விதிமீறலில் ஈடுபடுவது போலீஸ் என்றால்?
சென்னை: விதி மீறல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தர முடியுமா? என்பது பற்றி சமூக சட்ட சேவை அமைப்பின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான கே.எம். தேவன் விளக்கம் அளித்துள்ளார்.
காவல்துறை, போக்குவரத்துறை யுத்தம் கடந்த சில நாட்களில் உச்சகட்டத்தை எட்டியது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காவலர் ஒருவர் 22.05.2024 அன்று அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது டிக்கெட் வாங்க மறுத்தார். நடத்துநர் வாரண்ட் இல்லாமல் பயணிக்க முடியாது. டிக்கெட் எடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால், காவலர் கேட்காமல் சர்ச்சையில் ஈடுபட்டார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று வெளியாகி வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக போக்குவரத்துத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் வாரண்ட் இல்லாமல் காவலர்கள் பயணிக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தது.
இதனால் ஆவேசமான காவல்துறையினர் சிக்னலில் நிற்காத பேருந்துகள், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள், அதிக பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகள் என மொத்த 22 அரசு பேருந்துகள் மீது அபராதம் விதித்து அதிரடிக் காட்டியது.
அதனையடுத்து தாம்பரத்தில் வாரண்ட் உடன் பயணம் செய்த காவலரை டிக்கெட் எடுக்க நடத்துநர் வற்புறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்தது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
காவல்துறையின் வீதி மீறல்கள்! வைரலாகும் வீடியோக்கள்? போலீசாரை சட்டப்படி தண்டிக்க முடியுமா?

சென்னை: விதி மீறல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தர முடியுமா? என்பது பற்றி சமூக சட்ட சேவை அமைப்பின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான கே.எம். தேவன் விளக்கம் அளித்துள்ளார்.
காவல்துறை போக்குவரத்துறை யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காவலர் ஒருவர் 22.05.2024 அன்று அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது டிக்கெட் வாங்க மறுத்தார். நடத்துநர் வாரண்ட் இல்லாமல் பயணிக்க முடியாது. டிக்கெட் எடுக்க வேண்டும் என்று வாதாடினார்.
ஆனால், காவலர் கேட்காமல் சர்ச்சையில் ஈடுபட்டார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று வெளியாகி வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக போக்குவரத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் வாரண்ட் இல்லாமல் காவலர்கள் பயணிக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தது.
இதனால் ஆவேசமான காவல்துறையினர் சிக்னலில் நிற்காத பேருந்துகள், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள், அதிக பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகள் என மொத்த 22 அரசு பேருந்துகள் மீது அபராதம் விதித்து அதிரடிக் காட்டியது.
அதனையடுத்து தாம்பரத்தில் வாரண்ட் உடன் பயணம் செய்த காவலரை டிக்கெட் எடுக்க நடத்துநர் வற்புறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்தது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த விவகாரம் போக்குவரத்துறை மற்றும் காவல்துறை இரண்டுக்கும் இடையேயான மோதலாக வெடிக்க ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக போலீசார் மற்றும் போக்குவரத்துறையினர் இடையேயான மோதலை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று உள்துறைச் செயலர் அமுதா, போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்தர ரெட்டியைச் சந்தித்து ஆலோசனை செய்தாக தெரியவந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அரசு பேருந்தில் போலீசார் போலீசார் டிக்கெட் எடுக்க உரிய வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி காவலர் ஆறுமுக பாண்டியனும் நடத்துநரும் பரஸ்பர வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் ஆரத்தழுவி மோதலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
பொதுமக்கள் தவறு செய்தால், காவல்துறையினர் பொங்கி எழுது வழக்குப் போடுகின்றனர். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவலர்கள் மீது காவல்துறை பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை.
ஆனால், காவலர்கள் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்கதையாகவே மாறியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாக போக்குவரத்து காவலர் ஒருவர் ஒரு குட்டி யானை மீது தேவையில்லாமல் வழக்குப் பதிந்தது தொடர்பாக ஒரு வீடியோ வைரலானது. அதில், அந்தக் காவலர் ஏன் அபராதம் விதிக்கிறேன் என்பதைக் கூடச் சொல்ல மறுக்கிறார். எதற்கும் விளக்கம் அளிக்காமல் வீடியோவில் மவுனமாகக் காட்சி தந்தார். அது தொடர்பாக வாகன ஓட்டி கேள்வி எழுப்பும் வீடியோ பலரையும் பாதித்தது.
ஒரு ஆண்டுக்கு முன்னதாக ஒரு உணவகத்தில் ஆயுதப்படை காவலர்கள் தகராறு செய்தனர். தாம்பரம் அருகே உள்ள சைவ உணவகத்திற்குச் சென்றவர்கள் அசைவ உணவுக் கேட்டு தகராறு செய்தனர். அது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.
இதேபோல் கடந்த 5 ஆண்டுகள் முன்னதாக சென்னை அரசு பெண் மருத்துவரிடம் குடிபோதையில் முதல்நிலை காவலர் இளங்கோவன் தகராறு செய்தார். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதே காலகட்டத்தில் இரண்டு சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பி இருந்தன. ஒன்று, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை விழுப்புரம் காவலர்கள் தாங்கியது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையேயான மோதல்.
மற்றொன்று மதுபோதையில் நடக்க முடியாமல் கடை ஷட்டர் அருகே காவலர் ஒருவர் காக்கி சீருடையுடன் மயங்கிக் கிடந்த சம்பவம். இரண்டுக்கும் வீடியோக்கள் கூட வெளியாகி இருந்தன.
2021இல் ஒரகடத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் மதுபோதையில் அண்டை வீட்டுக்காரரிடம் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான சண்டையில் தகராற்றில் ஈடுபட்டார்.
நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடு ரோட்டில் மது போதையில் ஊர்காவல் படை காவலர் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சிகள் வெளியாகின.

2வருடங்கள் முன்னதாக ஒரு ஆஃபாயிலுக்காக தஞ்சாவூரில் சண்டை போட்டுக் கொண்ட போலீசார் கடைசியில் கடையையே சூறையாடின சம்பவமும் நடந்தேறியது.
மதுபோதையில் காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டது தொடர்பாகப் புகார் எழுந்தது. அந்தக் காவலர் மதுபோதையிலிருந்தது சக காவலர்கள் ஒப்புக்கொண்ட சம்பவமும் நடந்தேறியது.
இப்படிக் காவலர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் என்ன செய்வது? சமூக சட்ட சேவை அமைப்பின் மாநிலத் தலைவர் கே.எம். தேவனிடம் விளக்கம் கேட்டோம். அவர், "பொதுவாக முறைகேட்டை வீடியோவாக பதிவிட்டு புகார் கொடுக்கலாம். அந்த வீடியோவில் தேதி, நேரம் கட்டாயம் பதிவாகி இருக்க வேண்டும். அதைக் கொண்டே குற்றத்தை நிரூபிக்கலாம்.
காவல்துறையினர் மீதான புகாரை உயர் அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் குற்றம் செய்தவரைத் தப்பிக்கவே பல முயற்சிகளைச் செய்கிறார்கள். இதுதான் நடைமுறை.
ஒரு காவலர் தொப்பி அணியாமல் பணி செய்கிறார் என்றாலும் அல்லது அடையாள அட்டை இல்லாமல் பணி செய்கிறார் என்றாலும் அதற்கான வீடியோ பதிவு தேவை.
நோ எண்ட்ரி என் பலகை வைத்துவிட்டு, அதே வழியில் காவலர்கள் வாகனத்தை ஓட்டி வருகிறார்கள். பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கிறார்கள். ஒரே வாகனத்தில் 4 போலீஸ் உட்கார்ந்து போகிறார்கள். இப்படிப் பல சம்பவங்கள் வழக்கமாக நடக்கின்றன. ஆனால், அதை எல்லாம் யாரும் பெரியதாக எடுத்துக் கொண்டு புகார் அளிப்பதில்லை.
அப்படி அளித்தால் யார் புகார் கொடுத்தாரோ அவரையே அலைக்கழிப்பார்கள். அவர் வெறுத்துப் போய்விடுவார். அழுத்தம் கொடுத்தால் கடைசியில் வெறும் 500 ரூபாய் அபராதம் போடுவார்கள். இதுதான் யதார்த்தம்" என்கிறார் இந்த வழக்கறிஞர்.
இதைத்தான் காவல்துறையினர் தவறு செய்தால் 100 அல்லது 102இல் புகாரும் தெரிவிக்கலாம். ஆனால், அந்தப் புகாரையும் காவல்துறைதான் விசாரிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications