அதானிக்கு வாரண்ட் தந்த நியூயார்க் நீதிபதி! அமெரிக்கா அவரை கைது செய்ய முடியுமா? சட்டம் சொல்வது என்ன?
சென்னை: கவுதம் அதானி அமெரிக்காவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய நியூயார்க் நீதிபதி வாரண்ட் பிறப்பித்துள்ளார். இதற்கான வாரண்ட் அமெரிக்காவின் foreign law enforcement authorities அதாவது வெளியுறவு சட்ட அமலாக்க துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் கவுதம் அதானி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா அதிகாரிகளால் இந்தியாவிற்குள் ஒருவரை கைது செய்ய முடியுமா? அது எப்படி சாத்தியம் ஆகும்? என்று இங்கே பார்க்கலாம்.
அமெரிக்காவின் சட்டத்தின்படி அந்நாட்டு அரசின் foreign law enforcement authorities குழு வெளிநாட்டில் கைதுகளை செய்ய முடியும். ஆனால் அதற்கு சில விதிகள் சூழ்நிலைகள் உள்ளன.

நாடு கடத்தல்: அமெரிக்க மத்திய அரசு ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தங்கள் நாட்டிற்கு குறிப்பிட்ட ஒப்பந்தங்களை செய்த பின் நாடு கடத்த முடியும். யு.எஸ். மார்ஷல்ஸ் சர்வீஸ் (யு.எஸ்.எம்.எஸ்) என்பது வெளிநாடிற்கு தப்பியோடியவர்களை, வெளிநாட்டில் உள்ளவர்களை, பதுங்கி இருப்பவர்களை கைது செய்யும் மற்றும் நாடு கடத்தும் முதன்மையான கூட்டாட்சி நிறுவனமாகும்.
இதன் மூலம் முறையான அனுமதிகளை பெற்று.. ஒருவரை கைது செய்யவும் .. விசாரிக்கவும்.. அவருக்கு தண்டனை கொடுக்கவும் முடியும். ஆனால் இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வெளியுறவு விதிகளை, ஐநாவின் விதிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும். ஐநாவின் immunity விதிகளை முக்கியமாக மதிக்க வேண்டும்.
அமெரிக்கா நினைத்தால் ஒருவரை அந்த நாட்டிற்கே தெரியாமல் நாடு கடத்த முடியும். கைது செய்ய முடியும். ஆனால் அது இருநாட்டு பிரச்சனையாக முடியும். முக்கியமாக இரண்டு நாட்டு வெளியுறவு பிரச்சனையாக முடியும் .
அதானியை கைது செய்ய முடியுமா?: இங்கே அதானி விவகாரத்தில் அமெரிக்கா அவரை கைது செய்ய இந்தியாவிடம் ஒப்பந்தமோ அனுமதியோ பெற வேண்டும். அதற்கு இந்திய அரசு அனுமதி கொடுக்காது. இது பாஜக - அதானி நட்பு என்பதை தாண்டி.. இந்திய குடிமகன் ஒருவர்.. இந்திய பணக்காரர் ஒருவரை அமெரிக்கா நாடு கடத்த இந்தியா அனுமதிக்காது. அது அதானி என்று இல்லை.. யாராக இருந்தாலும்.
இதை மீறி அதானியை கைது செய்ய வேண்டும் என்றால்.. அமெரிக்கா சட்ட விரோதமாக நாடு கடத்தலாம். ஆனால் அது இருநாட்டு பிரச்சனையாக முடியும். முக்கியமாக இரண்டு நாட்டு வெளியுறவு பிரச்சனையாக முடியும். அதுவே அதானி அமெரிக்கா போகும் பட்சத்தில்.. அமெரிக்காவுடன் கைது நடவடிக்கைகளில் ஒப்பந்தம் செய்துள்ள கனடா போன்ற நாடுகளுக்கு செல்லும் பட்சத்தில் அமெரிக்கா அவரை கைது செய்யலாம். ஆனால் இதுவும் ரிஸ்க்தான்.
வழக்கு என்ன?: லஞ்சம் தர முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2100 கோடி ரூபாய் முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. 2023ம் தேதி இது தொடர்பாக அமெரிக்க எப்பிஐ கவுதம் அதானி உறவினர் சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது குறிப்பிடத்தக்கது.
250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது . கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பின்னணி: கவுதம் அதானி ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அமெரிக்கா முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக.. அவர்களிடம் உண்மைகளை மறைத்துவிட்டதாகவே அதானி மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் அவரின் Adani Green Energy Ltd 12 கிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டத்தில் கையெழுத்து போட்டு உள்ளது. இதற்காக பல கோடிகளை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்த அமெரிக்க நிறுவனங்களிடம் அதை மறைத்து .. 265 மில்லியன் டாலரை அதானி குழுமம் லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில் உள்ள முக்கியமான விஷயம், சோலார் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்கள் செய்த முதலீட்டு பணத்தை லஞ்சமாக அதானி இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளார். அதாவது அமெரிக்க நிறுவனங்களின் செலவில்.. அதானி லஞ்சம் தந்துள்ளார் அல்லது தர முயன்று உள்ளார் என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications