தனி மெஜாரிட்டி இல்லை என்றால் சிஎம் ஆக முடியுமா? விஜய் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் விஜய்யால் முதல்வர் ஆக முடியுமா? அவர் ஆட்சி அமைக்க முன் இருக்கும் சவால்கள் என்ன என்று பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி தற்போதைய நிலவரப்படி தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. 12 மணி நிலவரப்படி தவெக 107 தொகுதிகளும், அதிமுகவிற்கு 66 தொகுதிகளும் திமுகவிற்கு 61 தொகுதிகளும் முன்னிலை பெற்றுள்ளன. பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது.

Can Vijay Become CM Without Majority in Tamil Nadu Assembly Elections What Are the Challenges Ahead

விஜய் ஆட்சி அமைக்க முடியுமா?

தவெக, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதையை நிலவரப்படி பார்த்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கே வாய்ப்பு உள்ளது. தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றால் விஜய்யே முதல்வராக வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக விஜய்க்கு பல சவால்கள் உள்ளன. பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

* தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.

* ஆளுநர் இதனை ஏற்றுஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் சட்டசபையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

* விஜய்க்கு 117 என்ற மேஜிக் எண் கிடைக்காவிட்டால் பிற கட்சிகளின் ஆதரவை கோர வேண்டியிருக்கும்.

* சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை காட்ட வேண்டும்.

* பெரும்பான்மைக்கு மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோர வேண்டும்.

விஜய் முன் இருக்கும் பெரும் சவால்

தவெக இன்னொரு சவாலும் இருக்கிறது. பெரும்பான்மை பெறாவிட்டால், மத்தியில் ஆளும் பாஜக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தவெகவின் பலம் வாய்ந்த எம்.எல்.ஏக்களைக் குறிவைத்து, அவர்களை இழுப்பதன் மூலம் தமிழகத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த பாஜக திரைமறைவு வேலைகளைத் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜகவின் 5 வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிமுக, தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஒருவேளை தவெகவில் பிளவு ஏற்பட்டால் அல்லது ஒரு நிலையற்ற அரசு அமைந்தால், சில காலம் கழித்து தவெகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் தன் பக்கம் இழுத்து அதிமுக ஆட்சியமைக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதே நேரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) ஆகும். இச்சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கினர் (2/3) மொத்தமாகப் பிரிந்து சென்றால் மட்டுமே அவர்களின் எம்.எல்.ஏ பதவி தப்பிக்கும். தற்போதைய நிலவரப்படி அதிமுக 70 இடங்களில் முன்னிலை வகிப்பதால், சுமார் 51 எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைந்து வெளியேறினால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும்.

அதிமுக போன்ற கட்சியில், ஒரே நேரத்தில் அத்தனை பேர் தவெகவிற்கு மாற வாய்ப்பு மிகக்குறைவு. ஆனாலும், எடப்பாடியை பிடிக்காமல் அவர் அணியில் இருந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்பதே அரசியல் நிதர்சணம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+