ஒருவர் பெயரில் அதிக மின் இணைப்பு.. 100 யூனிட் இலவசம் சாத்தியமா? தமிழக மின்சார வாரியம் அடுத்த அதிரடி?
சென்னை: ஒருவரே இரு மின் இணைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கும் புதிய நடைமுறை குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் தரப்பில் சொல்வதென்ன?
தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது, இந்த வருடமும் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருந்தது. அதன்படி, இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கும் வந்துள்ளது.

அதேபோல, மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக திடீர் தகவல் வெளியானது.. ஆனால், 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று மின்வாரம் வாரியம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோர்கள்: அந்தவகையில் தற்போது, 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை, அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது..
அதேபோல, ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.
மின் இணைப்புகள்: தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளையும் தொடங்கியிருக்கிறது. அதேசமயம், ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது என்றும், அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்றும் அரசு உறுதி தந்துள்ளது.
எனவே, தமிழக மின்வாரியம் வருவாயை பெருக்க ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறை சென்னையில் தற்போது அமல்படுத்தியிருக்கிறது.
கணக்கெடுப்பு: இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் அமல்படுத்த முடிவாகியிருப்பதாக தெரிகிறது. எனவே, ஒரே உரிமையாளரின் 2 மின் இணைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்காக, அது போன்ற இணைப்புள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி ரகசியமாக நடப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் தரப்பில் சொல்லும்போது, "ஒரு வீட்டில் இரு இணைப்புகள் பெற்றிருந்தால் தலா 100 யூனிட் இலவசமாக பெறுகின்றனர். அதே போல் வர்த்தக நிறுவனத்துக்கு இரு இணைப்புகள் இருக்கும் போது மின் கட்டணம் குறைவாக வரும். ரகசிய கணக்கெடுப்பில் இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு இரு வீடுகளில் ஒன்றுக்கு மட்டும் 100 யூனிட் கழித்து கட்டணம் விதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை: ஆனால், இதற்கும் பொதுமக்கள் தரப்பில் ஆங்காங்கே அதிருப்தி கிளம்பியிருக்கிறது.. மாதம் ஒரு முறை கணக்கெடுத்தால் 100 யூனிட் இலவசம் தரவேண்டிய அவசியமில்லை.. எனவே, அரசு இதை புரிந்து கொண்டு ஏற்கனவே இருந்ததைபோல, மாதம் ஒருமுறை கணக்கெடுக்க முன் வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications