Railway: ரயில்களில் அதிகபட்சம் எவ்வளவு மதுபானம் எடுத்துச் செல்லலாம்? ரயில்வே ரூல்ஸ் தெரியாம மாட்டிக்காதீங்க
சென்னை: ரயில்களில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலோ, அல்லது மது அருந்திவிட்டு மற்ற பயணிகளோடு தகராறில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது அனைவரும் தெரிந்ததே.. ஆனால் பைகளிலோ, உடைமைகளிலோ மதுபான பாட்டிகளை எடுத்து செல்லலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். இது தொடர்பாக ரயில்வே விதி என்ன சொல்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
மக்களுக்கு ரயில், பஸ் போக்குவரத்து சேவை இன்றியமையாததாக உள்ளது. அதிலும் குறிப்பாக பஸ்களை விட ரயிலில் செல்வதற்கே மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தொலைதூர பயணம் என்றாலும் ரயிலில் டிக்கெட் இருக்கின்றதா என்று தான் முதலில் தேடுகிறார்கள்.

இந்தியன் ரயில்வே
ஏனென்றால் பஸ்களை விட ரயிலில் செல்வது அசதி தெரியாமல் இருக்கும் என்றும், ரயிலில் கழிவறை வசதி, குறைந்த செலவு என்பதால் பலரும் ரயில் சேவையையே அதிகம் விரும்புகிறார்கள். ரயில்வேயும் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை செய்து வருகிறது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, ரயில் சேவைகளை அதிகரிப்பது, புதிய வழித்தடங்களை அமைப்பது, பாதுகாப்பான பயணம் என ரயில்வேயும் புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சில பயணிகளுக்கு ரயில்களில் மதுபானங்களை எடுத்து செல்லலாமா என்பது குறித்த சந்தேகங்கள் எழலாம். இது குறித்து ரயில்வே விதிகள் சொல்வதை இங்கு பார்க்கலாம்.
ரயிலில் செல்லும் போது மது அருந்தலாமா
ரயில்வேயின் மதுபானக் கொள்கையின்படி, ரயில்களில் மதுபானம் எடுத்துச் செல்வது அல்லது அருந்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், எந்தப் பயணியும் மதுபாட்டில்களுடன் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த விதியை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்களில் மதுபானம் அல்லது மது அருந்துவது அனுமதிக்கப்படவில்லை. இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தையும் தொந்தரவையும் ஏற்படுத்தும். குடிபோதையில் இருக்கும் பயணிகள் சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளலாம், மற்ற பயணிகளுக்கு தொந்தரவை அளிக்கலாம். இதானால், ரயில்களில் மது அருந்தவோ அல்லது மது எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
6 மாதம் ஜெயில் தண்டனை
ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் மது அருந்தினால் முதல்முறையாக என்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். ஆனால் அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் தொடர்ந்து செய்தால், தண்டனை காலம் அதிகரிக்கலாம்.
இதேபோன்று ரயிலில் மது அருந்திவிட்டு மற்ற பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 6 மாத ஜெயில் தண்டனையும் ரூ.500 வரை அபராதமும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் மதுபானம் எடுத்து செல்லலாமா?
1989 ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் படி இந்திய ரயில்வேயில் மதுபானம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுளது. நேரடியாக மதுபானத்தைத் தடை செய்யவில்லை என்றாலும், ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
அதாவது, ரயில்வே சட்டம் பிரிவு 165 இன் கீழ், அங்கீகரிக்கப்படாத எந்தப் பொருளையும் சோதனையிடவும், பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. அதாவது, பெரும்பாலான இந்திய ரயில்வே வழித்தடங்களில் மதுபானம், சீல் வைக்கப்பட்ட பாட்டில்களாக இருந்தாலும், எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதே ஆகும்.
ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது ஒரு பயணி மதுபானத்துடன் பிடிபட்டால், அது பறிமுதல் செய்யப்படலாம். மேலும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே, பயணம் செய்வதற்கு முன் ரயில்வே விதிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் மதுபான விதிகள்:
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் மதுபானச் சட்டங்கள் பெரிதும் வேறுபடுகின்றன. குஜராத், பீகார், நாகாலாந்து, லட்சத்தீவு போன்ற மாநிலங்கள் முழுமையான மதுவிலக்கைக் கொண்டுள்ளன. அதாவது, அங்கு மதுபானம் வாங்கவோ, விற்கவோ, கொண்டு செல்லவோ முடியாது. மதுபானம் சட்டபூர்வமான ஒரு மாநிலத்தில் உங்கள் பயணம் தொடங்கினாலும், மதுவிலக்கு மாநிலத்திற்குள் நுழைந்தாலோ அல்லது கடந்து சென்றாலோ சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
அதிகாரிகள் மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்யலாம், அபராதம் விதிக்கலாம் அல்லது மாநில மதுவிலக்குச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். புறப்படும் மற்றும் சேரும் மாநிலங்களின் மதுபான விதிமுறைகளைச் சரிபார்ப்பது முக்கியம். ஏனெனில், சட்டத்தைப் பற்றிய அறியாமை சரியான பாதுகாப்பாக அமையாது.
எவ்வளவு மதுபானம் கொண்டு செல்லலாம்:
இந்திய ரயில்களில் மதுபானம் கொண்டு செல்வது அறிவுறுத்தப்படவில்லை என்றாலும், அவ்வாறு செய்ய முடிவு செய்பவர்கள் அதற்கான வரம்புகளை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, பாட்டில் சீல் செய்யப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும். விற்பனைக்கோ அல்லது விநியோகத்திற்கோ இருக்கக் கூடாது.
தேசிய அளவில் இதற்கு எந்த வரம்பும் இல்லை என்றாலும், சட்ட வல்லுநர்கள் ஒரே மாநிலத்திற்குள் பயணம் செய்யும்போது சுமார் இரண்டு லிட்டர் என்ற வரை கொண்டு செல்லலாம் என வரம்பு வைத்துள்ளனர். இந்த அளவை மீறினாலோ, பாட்டில் சீல் செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது கொள்முதல் ரசீது இல்லாவிட்டாலோ அபராதம் அல்லது பறிமுதல் செய்யப்படலாம். குறிப்பாக மாநிலங்களுக்கிடையேயான பயணங்களில் எந்த மதுபானமும் கொண்டு வராமல் இருப்பதே பாதுகாப்பான அணுகுமுறையாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications