அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர்.. தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. முத்தரசன் உறுதி!
அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் இழப்பார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருப்பதாகவும், தோல்வி பயம் காரணமாக அதிமுக அவதூறு பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கேஎஸ் தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

முத்தரசன் பேட்டி
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சிறப்பாக இருக்கிறது. அதிகார பலம், பண பலம் பயன்படுத்தப்படுவதாக அதிமுக குற்றம்சாட்டுகிறது. அவர்களின் தோல்வி உறுதியானதால், தோல்விக்கான காரணத்தை அதிமுகவினர் சொல்லி வருகிறார்கள். இந்தத் தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்து தேர்தல் பணிமனை பேனரை மாற்றுவதும், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது மட்டுமே அதிமுகவின் பணியாக இருக்கிறது.

அதிமுகவின் குழப்பம்
அதிமுக தோல்வியடைய போகிறது. அதற்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது இன்று வரையும் தொடர்கிறது. இப்படி தான் களம் இருக்கிறது என்று தெரிவித்தார். அதிமுக தொடர்ந்து குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறது என்று தெரிவித்தார்.

பாஜக கிழித்த கோடு
தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் பற்றிய இபிஎஸ் விமர்சனம் குறித்த கேள்விக்கு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியாவில் எந்தக் கட்சி யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக கிழித்த கோட்டை தாண்டாத கட்சியாக அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாஜகவின் பிரச்சினைகளை குறித்து விமர்சிக்க முடியாத நெருக்கடியில் அதிமுக இருக்கிறது.

அதானி விவகாரம்
ஆனால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. திமுகவுக்கோ, மற்ற கட்சிகளுக்கோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு செயல்பட வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால் அதிமுகவுக்கு அப்படியல்ல. பாஜகவுக்கு சேவகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆளாகிறார்கள். வேட்பாளர் கூட பாஜக முடிவு செய்ய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மத்திய பட்ஜெட்டை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், அதிமுக எந்த கருத்தையும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் அதானி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து கூறவில்லை.

சமரசமில்லை
இதன் மூலமாக யாருக்கு யார் அடிமையாக இருக்கிறார்கள் என்பது புரியும். தங்கள் மீதான பழியை துடைக்க, இடதுசாரிகளை வசைபாடுவதன் மூலம் தங்கள் அணியிடம் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். இடதுசாரிகளின் போராட்டம் வழக்கம் போல் நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் போராடி கொண்டே தான் இருக்கிறோம். அதனை அதிமுகவினர் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் சமரசமே கிடையாது என்று தெரிவித்தார்.

அண்ணாமலை
தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றிய அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, அண்ணாமலை இன்னும் ஈரோடு இடைத்தேர்தல் களத்திற்கு செல்லவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். அதுதான் களத்தின் எதார்த்த உண்மை என்று தெரிவித்தார்.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர்.. 3.5 மணி நேரத்தில் 5.63 லட்சம் பேர்! அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications