சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள்!
சென்னை: திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் 3 பேர் உயிர் தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென்று தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த மத போதகர்கள் 3 பேர் உயிர் தப்பினர்.

சென்னை சிஎஸ்ஐ பேராலய மத போதகர்கள் ஜெயசீலன், தனசேகர் உட்பட 3 பேர் சென்னையில் இருந்து இன்று காலை ஆந்திர மாநிலம் நகரியில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெறும் மத போதனையில் பங்கேற்பதற்காகச் சென்றனர். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரசு கலைக்கல்லூரி அருகே சென்றபோது அவர்கள் பயணித்த கார் முன்பகுதியில் புகை வருவதை பார்த்த கார் ஓட்டுநர் சூசை காரை உடனடியாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து மத போதகர்களையும் இறக்கி விட்டார்.
அதற்குள் காரில் இருந்து தீ பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எரிந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கார் எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருத்தணி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து அங்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. ஓடும் காரில் தீ பற்றி எரிந்து நாசமான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மத போதகர்கள் மூன்று பேர் உயிர் தப்பினர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications