சென்னை போரூர் தனியார் கார் குடோனில் தீ விபத்து.. 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!
Recommended Video

சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் விரைந்து இருக்கிறார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக செய்திகள் வருகிறது.
நேற்று பெங்களூரில் எலஹாங்க பகுதியில் விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த விமான கண்காட்சியின் போது எதிர்ப்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் மொத்தம் 300 கார்கள் எரிந்து நாசம் ஆனது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் அதேபோல ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து எரிகிறது
காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தீ பற்றி எரிகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து இருக்கிறார்கள். மொத்தம் 7 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளது.

பெரிய போராட்டம்
இந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். அங்கு மொத்தம் 200 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என்கிறார்கள்.
பெரிய மோசம்
இந்த் தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரிய அளவில் புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது. போரூர் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். இந்த புகை காரணமாக அங்கு இங்கும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு கார்
இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது. தீ வேகமாக பரவுவதால் அங்கு இன்னும் சில நிமிடத்தில் நிறைய தீயணைப்பு வாகனங்கள் வருகை புரியும் என்கிறார்கள். உள்ளே குடோனில் பணியாற்றிய ஊழியர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications