சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்.. பல மணிநேர தேடுதலுக்கு பின் டிரைவரின் உடல் மீட்பு
சென்னை: சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும் போது கார் கடலில் விழுந்தது. கடலில் விழுந்த காரில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கடலோர காவல்படை வீரர் தப்பினார். கார் ஓட்டுநரை பல மணிநேரம் தேடிய நிலையில் இன்று இரவு சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்ல தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று அங்கு வந்துள்ளது. இந்த காரில் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டுநராக இருந்துள்ளார். இந்த நிலையில், துறைமுகத்தில் கடலோர காவல்படை வீரரை ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் சகி காரை ரிவர்ஸ் எடுக்கும் போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்தது.

அப்போது, காரின் கதவை உடைத்து கடலோர காவல்படை வீரர் தப்பியுள்ளார். இருப்பினும் கடலில் இருந்து வெளியே வந்தவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சக கடலோர காவல்படை வீரர்கள் மயங்கிய கடலோர காவல்படை வீரரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் சகியை மீட்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கார் ஓட்டுநர் முகமது சகியை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிரேன் மூலம் கார் தூக்கப்பட்ட நிலையில், அதில், ஓட்டுநர் சகி இல்லை. இதனால் அவர் எங்கே? என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
இந்நிலையில் தான் இன்று பலமணிே நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று இரவு முகமது சகி இறந்தது தெரியவந்தது. அவரது உடல் மீட்கப்பட்டது. அதன்பிறகு முகமது சகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications