நள்ளிரவில் அலறிய பயணிகள்.. சென்னை மின்சார ரயிலுக்குள் புகுந்து.. கத்தியால் வெட்டி பணம் கொள்ளை.. ஷாக்
சென்னை புறகர் மின்சார ரயிலில் இரவு நேரத்தில் பயணிகள் குறைவாக இருக்கும் பெட்டியில் ஏறிய 3 பேர் பயணிகளை கத்தியால் வெட்டி அவர்களிடம் இருந்து செல்போன் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் பயணிகளை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னை புறகர் மின்சார ரயிலில் இரவு நேரத்தில் பயணிகள் குறைவாக இருக்கும் பெட்டியில் ஏறிய 3 பேர் பயணிகளை கத்தியால் வெட்டி அவர்களிடம் இருந்து செல்போன் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற அதிரச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் பயணிகளை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ரயிலுக்குள் ஏறிய 3 பேர்: சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு மின்சார ரயில் சென்று கொண்டு இருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் ரயில் கவரபேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயிலில் பின்னால் இருந்து 4-வது பெட்டியில் நான்கு பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளையராகவன், உத்ராபதி, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏடூர் கிராமத்தை சேர்ந்த சரத், மவுலீஸ்வரன் என 4 பேர் ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ரயிலில் ஏறிய மூன்று இளைஞர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்போன் மற்றும் பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் அவர்கள் பணத்தை எடுக்காததால், அவர்கள் 4 பேர் மீது கத்தியால் வெட்டினர்.
அபாய சங்கிலியை இழுத்து: அப்போது ரயில் சென்று கொண்டிருந்ததால், 4 பேர் கத்திய போதும் யாருக்கும் கேட்கவில்லை. அதற்குள் 4 இளைஞர்களிடமும், அந்த கொள்ளை கும்பல் செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டு நடு வழியில் இறங்கி ஒடியது. கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை வழியே அந்த கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. ரயில் கும்மிடிப்பூண்டி வந்ததும், தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயத்துடன் இருந்த பயணிகளை அங்கிருந்த ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இளைஞர்களை தாக்கி கொள்ளையடித்த அதே கும்பல், மற்றொரு பெட்டியில் பயணிகளிடம் ரகளை செய்துள்ளது. அப்போது பயணி ஒருவர் தனது செல்போனில் மூன்று பேரையும் வீடியோ எடுத்து ரயில்வே போலீசுக்கு அனுப்பி வைத்தார். எனவே இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
பயணிகள் குறைவாக இருக்கும் பெட்டி: எந்த பெட்டியில் பயணிகள் குறைவாக இருக்கிறார்கள் என பார்த்து மூன்று பேரும் நோட்டமிட்டு, சம்பந்தப்பட்ட பெட்டியில் 4 பேர் மட்டுமே இருந்ததால் அங்கு தங்களது கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் ரயில்களில் குற்ற செயல்கள் அதிகரித்து வருவது பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications