சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குறியீடு".. அந்த உச்சந்தலை முத்தம்.. சாதி எங்கிருக்கிறது?.. பொட்டில் அடிக்கும் கர்ணன்.. ஜோதிமணி நச்

கர்ணன் படத்துக்கு ஜோதிமணி பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், நியாயத்தையும், வலியையும் பேசும் ஒரு வலிமையான படம்தான் கர்ணன் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. அந்த வகையில், "நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம் ❤️ சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம்" என எம்பி ஜோதிமணியும் புகழாரம் சூட்டி உள்ளார்.

'கர்ணன்' படம் வெளியாவதற்கு முன்பேயே, அது கொடியன்குளம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்ற ஒரு பேச்சு பரபரப்பாக எழுந்துது.. இப்போது அந்த படமும் வெளிவந்துவிட்டது.

பொடியன்குளம்' என்று காட்டப்படும் கிராமம் கொடியன்குளம் சம்பவத்தைத்தான் இந்த படம் சுட்டிக்காட்டுகிறது என்று பரவலாக எல்லாருமே சொல்லி வருகிறார்கள்.. இந்த படம் இருவேறு கருத்துக்களை தாங்கி வந்துள்ளது.

 கருணாநிதி

கருணாநிதி

1995-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த கொடியன்குளம் சம்பவத்தை 1998-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மாற்றிக்காட்டலாமா? மாரி செல்வராஜ் ஏன் வரலாற்றைத் தவறாக சித்திரிக்கிறார்? என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல, இப்போது இந்த படம் தேவையா? என்ற கேள்விகளும் எழுகின்றன..

 சாதி மோதல்

சாதி மோதல்

இளைஞர்கள் முன்னாடி மாதிரி இல்லை, இப்போதுள்ள தலைமுறையினர் முடிந்த அளவிற்கு சாதி பாகுபாடு இல்லாமல் சகஜமாக பழகி வருகிறார்கள்... பிள்ளைகள் அனைவரும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளனர்.. அவர்களுக்குள் எந்த பிரிவினையும் இப்போது தென்படவில்லை.. ஆனால், அவர்களிடத்தில் இந்த மாதிரியான படங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாகுபாட்டை விதைத்து விடாதா? இப்படிப்பட்ட படங்கள் ஒரு சாதிய மோதலை, கருத்து மோதலை ஏற்படுத்திவிடாதா? என்ற சந்தேகங்களையும் முன்வைத்து வருகிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இப்படி இந்த படத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதுமான கருத்துக்கள் சோஷியல் மீடியாவை வட்டமடித்து வரும் நிலையில், பெரும்பாலும் ஆதரவு கருத்துக்களையே இந்த படம் தாங்கி வருகிறது.. பலரின் பாராட்டுக்களையும் வாரி குவித்து வருகிறது.. அந்த வகையில் கரூர் எம்பி ஜோதிமணியும் இந்த படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.

 கர்ணன்

கர்ணன்


அதில், "கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை,வலியை,எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், குறியீடுகளும் நிறைய.அந்த உச்சந்தலை முத்தம் ❤️ சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்!" என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL
    ஜோதிமணி

    ஜோதிமணி

    இந்த படத்துக்கான வரவேற்பு பொதுமக்கள் மத்தியில் மேலும் மேலும் குவிந்து வருகிறது.. அம்பேத்கர் சட்டத்தில் சாதியை புகுத்தினார்... பெரியார் அதை அரசியலில் புகுத்தினார்... இப்போது இந்த படைப்பாளிகள் சினிமாவிலும் புகுத்தியுள்ளது, பெரியாருக்கு கிடைத்த வெற்றியே என்று மார்தட்டி வருகிறார்கள்.

    English summary
    Caste: Karnan Movie and MP Jothimani praises Director Mari Selvaraj
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X